Saturday, April 1, 2017

செய்திகளை எவ்வகையில் தான் தெரிந்து கொள்வது

அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ள..... ஒளி-ஒலி ஊடகம், அச்சு ஊடகம் மற்றும் சமூக ஊடகம் ஆகியவை உள்ளன.

இதில் சமூக ஊடகம் கட்டற்ற சுதந்திரம் உடையது. மேலும் உண்மை தன்மையும் கேள்விக்கு உரியது. ஆனால் ஒளி மற்றும் அச்சு ஊடகம் ஆகிய இரண்டும் குறைந்த பட்ச உண்மை தன்மை இருந்தாலும், ஊடக முதலாளிகளின் அரசியல் சார்பு நிலைக்கு ஏற்பவே மகுடி வாசிக்க வேண்டிய நிலை உள்ளது.

இன்றைய சூழ்நிலையில், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.....எனும் இத்தியாதி பெரியவர்கள், “ நான் தினசரி பத்திரிக்கை படிப்பதில்லை, டீவி பார்ப்பதில்லை, பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைக்கவில்லைஎன்றே கூறி வருகின்றனர்.

அரசியல் சார்பு நிலை, உண்மை தன்மை பற்றிய சந்தேகம், நேரம் விரயம் போன்ற உண்மைகள் இருந்தாலும், முற்றிலுமாக மேற்கண்ட ஊடகங்களை புறக்கணித்து விட்டு, சமூகத்தை எவ்வாறு புரிந்து கொள்ள இயலும்.

மக்களோட மக்களாக பழகுவதன் மூலம், அனுபவங்களை பெறலாம் என்றாலும்..... நமது மூளையின் ஒரு சார்பான புரிதல் நிலை மட்டுமே கிடைக்கும். மாறாக, ஒரு பிரச்சனை குறித்த பன்முக தன்மை கிடைக்காது.

இப்படியான எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளால்...... எப்போதும் தீர்வை முன்னிறுத்த இயலாது. அடிப்படை சரியாக இல்லாத கட்டிடத்தை வைத்து என்ன செய்வது???

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment