Wednesday, April 5, 2017

பொய் விளம்பரங்களும், பொதுமக்களும்

நமது மக்களிடம், நல்ல குணம் ஒன்று உண்டு. எந்த உண்மையை சொன்னாலும், எளிதில் ஏற்று கொள்ள மாட்டார்கள். மாறாக, எந்த பொய்யையும் கேள்வி கேட்காமலே, ஏற்று கொள்வார்கள். இந்த உண்மையை(?) தாராக மந்திரமாக எடுத்து கொண்டு, மார்க்கெட்டிங் என்ற பெயரில் பொதுமக்களை எமாற்றி கொண்டிருக்கின்றன வணிக நிறுவனங்கள்.
இந்த பட்டியலை, வணிக நிறுவனங்கள் என்று குறுக்கி கொள்ள முடியாது.

எல்லா நோயையும் குணமாக்கும் என்று சொல்லும் ஊடக மருத்துவர், எங்களது கல்லூரியில் சேர்ந்த அனைவரும் கேம்பஸ் இண்டீரிவ்வில் வேலை., பாரம்பட்சமில்லாமல் அள்ளி தெளிக்கப்ப்படும் அரசியல் வாக்குறுதிகள், இந்த ராசிக்கல் மோதிரத்தை அணிந்தால் சகலும் வந்து சேரும் ..... என்றெல்லாம் பட்டியல் நீளும்.

என்னுடைய கேள்வி;- இத்தகைய போலி வியாபார தந்திரத்தில்,,,, யாரை குற்றவாளி கூண்டில் ஏற்றுவது????

என்னை பொறுத்துவரை, இருவரும் குற்றவாளிகளே!!!... வாக்குறுதிகளை அள்ளி தெளிக்கும் அரசியல்வாதிகளை மட்டுமோ, இந்த மருந்தை சாப்பிட்டால் அனைத்து வியாதிகளுக்கு சரியாகும் என்று பேசும் ஊடக மருத்துவர்களை மட்டுமோ, இந்த பேஸ்ட் கொண்டு விளக்கினால் பல் நோயே வாராது என்று பேசும் நடிகைகளை மட்டுமோ, இந்த பானத்தை அருந்தினால், புத்துணர்ச்சி கிடைக்கும் என்று பேசும் கிரிக்கெட் வீரனை மட்டுமோ.... அல்ல..... அனைத்து பொது மக்களும் தான்!!!!

இயற்கை படைப்பியலில், உச்சபட்சமாக மனிதனுக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளது. அதை கொண்டு யோசித்து... இவையெல்லாம் சாத்தியமா?? என்று என்றவது யோசித்திருமா???

நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்என்று ஆசைப்படுகிறமோ, அப்படிப்பட்ட வாழ்க்கை நிலை பேச்சின் மூலமும், ஒளிப்படங்கள் வயிலாக சொல்லுவதை உண்மையென நம்பி, சாக்கடையில் விழுந்து விடுகிறோம்.... பிறகு, ” அது சாக்கடையா... அது எனக்கு தெரியாம போச்சே!?!??” என்பது வழக்கமாகி விட்டது.

------------------------------------------------------------------------------

இப்படி உண்மை சொன்னாலும், நம்ப மாட்டோம்!!! இவன் வேலையில்லாமல், ஏதாவது உளறி கிட்டு இருப்பான் என்று தானே கடந்து செல்கிறீர்கள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment