முகநூல்
குறித்த அதீத பயம், எப்போதும்
என் மனதில் உண்டு. ” நம்முடைய
நேரத்தை அதிகமாக ஆட்கொண்டு விடுமே
“ என்ற பயம் தான்!!! . 2013 வாக்கில்
தான் இணைந்தேன். அதற்கு முன்னர் வரை,
தினசரி பத்திரிக்கை மற்றும் புத்தகம் ஆகிய
இரண்டுமே, என்னுடைய அறிவு பசியை தீர்ப்பவையாக
இருந்தன.
முகநூல்
இணைந்த பிறகு, என்னுடைய எண்ணைத்தை/பயத்தை சிறிது மாற்றி
கொண்டேன். முகநூலினை சரியாக பயன்படுத்தி கொள்ள
வேண்டும் என்று எண்ணினேன். முடிந்த
வரை, அதை பின்பற்றியே வருகிறேன்
என்று நினைக்கிறேன்.
அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும்
புத்தகங்கள் ஆகியவை பொதுநலம் சார்ந்து
நடத்தப்பட்டாலும், அதில் பணமும் ஒரு
நோக்கமாக அமைகிறது. ஆதலால், ” எதை செய்தால் வாசகர்கள்/மக்கள் விரும்புவார்கள் என்ற
நோக்கிலே” செயல்படுவையாக இருக்கின்றன. இத்தகைய காரணங்களில், மேற்கண்ட
ஊடகங்கள் பயணிக்கும் பாதை என்பது சற்று
சுருக்கப்பட்டதாகவே அமைகிறது. புனைவு மற்றும் கவர்ச்சி
தன்மை சார்ந்தே அமைகிறது.
அந்த குறையை முகநூல் போன்ற
சமூக ஊடகம் உடைத்தெறித்து இருக்கிறது
என்பேன். இதிலும் கவர்ச்சி தன்மையும்
புனைவும் இருந்தாலும், குறைவாகவே இருப்பதாகவே தோன்றுகிறது. ஒரு கருத்தை/நிகழ்வை
360 டிகிரி பார்வையில் முழுவதுமாக ஆராய்ந்து விடுகிறது. இதனால் முற்று பெற்ற
முடிவுகளை பெற முடியாத என்றாலும்,
கருத்து செறிவு மிகுந்ததாகவே இருக்கிறது.
எனக்கு முகநூல் பல்வேறு தகவல்களையும்
கோணங்களையும் தந்து கொண்டு தான்
இருக்கிறது.
என்ன அதீத புகழ்ச்சியாக தோன்றுகிறதா???
இதுமாதிரி
செயல்படுவர்கள், நிச்சயமாக 5 சதவீதத்திற்கு குறைவானவர்களே!!! அவர்களை தேடி கண்டுபிடித்து,
உங்கள் நட்பு பட்டியலில் இணைப்பது…
உங்கள் திறமை!!!
இதையெல்லாம்
தவிர்த்து… 95 சதவீதம் நண்பர்கள், வேறு
காரணங்களுக்காகவே முகநூலை பயன்படுத்துகிறார்கள். அவர்களை சமாளித்து
விலகி இருப்பதும், உங்கள் ஆளுமையின் வெளிப்பாடு….
எல்லாவற்றிலும்
நன்மையும் தீமையும் சேர்ந்தே இருக்கும்!!! அதை நீங்கள்… எவ்வகையில்
பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் கையில்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment