சூழலியலாளர்
நக்கீரனின் கார்ப்பரேட் கோடாரி என்ற சிறு
புத்தகத்தை வாசித்தேன். பசுமை விகடனில் வெளிவந்த
கட்டுரைகளின் தொகுப்பு.
நிச்சயமாக...
ஒரு முறை வாசிக்கப்பட வேண்டிய
புத்தகம்!!!
வளர்ச்சி
என்ற ஒற்றை சொல்லிற்காக..... மூன்றாம்
தர உலக நாடுகளில், முதலாளித்துவ
கொள்கையின் தீமைகளை ஆசிரியர் விளக்குகிறார்.
கிராமமயமாக்கல்
என்ற புதிய சொல்லாட்சியை, இந்நூலின்
மூலம் அறிகிறேன். நகரமயமாக்கலை போல், கிராமமயமாக்கலின் புதிய
முகங்களை அறிய முடிகிறது.
உரப்பயன்பாட்டின்
அதிகரிப்பு, பராம்பரிய பயிர்முறையை அழித்தல், பணப்பயிர்களான கோகோ மற்றும் எண்ணெய்
பனையின் உற்பத்தி அதிகரிப்பு, உயிர்-பிளாஸ்டிக் உற்பத்தியில்
உணவு தானியங்களின் பயன்பாடு, ஆப்பரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களில்
ஏற்பட்ட உணவு சிதைவு என்று
பலவற்றை கூறுகிறார்.
விகடன்
பிரசுரம்.... வாசித்து பாருங்களேன்!!
--------------------------------------------------------------------------
தெரிந்தோ,
தெரியாமலோ முதலாளித்துவ பொருளாதார கோட்பாட்டில் அகப்பட்ட பிறகு, அதை முற்றிலும்
புறக்கணிப்பது நல்லதல்ல. அதே சமயத்தில் சூழ்நிலைக்கு
பாதிப்பு ஏற்படாதவாறு, மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நிலை!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment