Wednesday, May 24, 2017

கிரிக்கெட் வீரர்களும் பிம்ப கட்டமைப்புகளும்

கிரிக்கெட் நட்சத்திரங்களில்….. தோனி மற்றும் டெண்டுல்கர் மீதான பிம்ப கட்டமைப்புகளில், எனக்கு சில அசுசைகள் உண்டு. சாதாரண கிரிக்கெட் ரசிகராக, தோனியின் தலைமை பண்பையும், டெண்டுல்கரின் ஆட்ட திறனை கண்டும் ரசித்ததுண்டு. ஆனால் அதனை தாண்டிய இருவரின் கட்டமைப்புகள் அதீதமாகவே தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், அணியின் தலைவராக தோனி பங்கு அளப்பறியது. அதில் எள்ளவும் ஐயமில்லை. ஆனால், “ தோனி மட்டும் இந்திய அணியை தலை நிமிர செய்தார்என்ற புரிதலிலே தான் பிரச்சனை.

ஒரு இயக்கத்தினை வழிநடத்தி செல்லும் போது, அதில் ஒருவர்/இருவர் மட்டுமே, வரலாற்றில் இடம் பிடிப்பார். அத்தகைய இயக்கத்தின் வெற்றி, ஒன்றிரண்டு நாளில் எழ முடியாது. இன்றைய திராவிட கழகங்களின் வளர்ச்சியில், நீதி கட்சி மற்றும் பெரியாரின் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. அதனை நினைவில் கொள்ளாமல், இன்றைய திராவிட இயக்கங்களை மட்டுமே பெருமை கொள்ள இயலாது.

குப்த பேரரசில், சமுத்திர குப்தரின் காலம் பொற்காலமாக பொறிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு அடித்தளம் அமைத்த ஸ்ரீகுப்தரையோ, முதலாம் சந்திரகுப்தரையோ பெருமைப்படுத்தப் படுவதில்லை. முகலாய பேரரசில் அக்பர் தெரிந்த அளவிற்கு, பாபர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு இயக்கத்தின்/ பேரரசின் வரலாற்றில் ஒரு மன்னரை/தலைவரை அடையாளமாக பிம்பப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், அவரையே கடவுள் என்ற நிலைக்கு எடுத்து செல்ல வேண்டிய தேவையில்லை. கால ஒட்ட நிலையின் உச்சப்பட்ச நிலையான ஒரு மனிதர் அடையாளம் காட்டப்படுவர். அத்தகைய மனிதராகவே சமுத்திர குப்தரையும் அக்பரையும் அசோகரையும் இன்றைய திராவிட இயக்கங்களையும் தோனியை அடையாள படுத்த முடியும்.

காவஸ்கர், கபில்தேவ், அசாரூதின், டிராவிட், கங்குலி என பல கிரிக்கெட் கேட்பன்களால் கட்டமைப்பப்பட்ட கிரிக்கெட் அணி, மெதுவாக வளர்ச்சி நிலைகளால், தோனியில் உச்சப்பட்ச நிலையில் நின்றிருக்கிறது. இத்தகைய புரிதலை கொள்ளாமல், தோனியின் பிம்பத்தை கட்டமைப்பதோ…. அபத்தமாக தெரிகிறது.

அடுத்தது டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், டெண்டுல்கரின் பயணம் முக்கியமானது. அதே சமயத்தில் கடவுள் என்பதெல்லாம், கொஞ்சம் அதீதமாகவே தெரிகிறது.
உலக அளவிலான விளையாட்டில், கிரிக்கெட்டின் பங்கு மிக குறைவு. இன்னும் ஒலிம்பிக்கில் கூட நுழைய முடியவில்லை. கிரிக்கெட் விளையாட கூடிய நாடுகள் என்றால், 20 கூட தண்டாது.

உசைன் போல்ட் போல், மைக்கேல் பெலப்ஸ் பொல் இந்தியாவிற்காக பெருமை தேடி தந்தால், அவரை கடவுளாக அவதனிப்பது நன்று.
மேலும், டெண்டுல்கரின் அடித்த ரன்கள், இந்தியாவின் வெற்றிக்கும், உலக விளையாட்டு உலகத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.

மேலும் கிரிக்கெட்டில் மட்டை வீச்சாளர்களை மட்டும், திறமையானவர்கள் என்ற பிம்பமும் கொஞ்சம் இடிக்கவே செய்கிறது. பந்து வீச்சாளர்கள் ,மற்றும் தடுப்பாளர்கள் பணி பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்பதையும், இதனுடன் சேர்த்து பார்க்க விரும்புகிறேன்.

தோனி மற்றும் டெண்டுல்கர் ஆகிய இருவரின் திறமை குறித்த சந்தேகம் இல்லை. ஆனால், அவர்களுடைய திறமையை, வரலாற்றின் அடிப்படையிலும், அதன் கால ஒட்டத்திற்கு ஏற்ப புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதை விடுத்து…. அவர்கள் குறித்த பிம்பத்தை branding என்ற நிலையில் எடுத்து செல்வதே கடினமாக உள்ளது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment