Monday, May 15, 2017

கிரிக்கெட்டும், அரசியல் சார்பு நிலையும்

ஐபிஎல் போட்டிகளில், லிக் போட்டிகள் முடிவடைந்து விட்டது. திறமையான வீரர்கள் இருந்தாலும், பெங்களூர் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மிக திறமையான வீரர்கள் இல்லாமலும், ஹதரபாத் மற்றும் புனே அணிகள் முன்னிலை வகித்தது. யாருக்கு கோப்பை?? என்பதற்கு ஒரு வாரம் காத்திருப்போம்!!!

நான் சொல்ல வந்த செய்தி.... இதை தாண்டியது??

அனைத்து போட்டிகளிலும், மட்டைவீச்சாளர்களே அணியின் தலைவனாக செயல்பட்டார்கள். டெ;ல்லி அணியில் மட்டும் பந்து வீச்சாளாரான ஜாகீர் கான் அணியின் தலைவராக இருந்தார்.

இந்த நிகழ்வு என்பது ஐபிஎல் போட்டி மட்டுமல்ல. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அணியின் தலைவர் மட்டை வீச்சாளராகவே உள்ளார். எந்த இந்த பராபட்சம்?? என்று புரியவில்லை.

பந்து வீச்சாளர்கள், அணியினை வழிநடத்த திறமையற்றவர்கள் என்பது போல் போலிபிம்பம் ஏற்படுத்துவது ஏனே????.

கிரிக்கெட் விளையாட்டில், பந்து வீச்சாளர்கள், மட்டை வீச்சாளர்கள் மற்றும் காப்பாளர்கள் என்று மூன்று பேரின் பங்களிப்பும் இருக்கிறது. எடுக்கப்படுகின்ற/எடுக்கப்படாத ஒவ்வொரு ரன்னிலும், மூவரும் பங்களிப்பு அதிகம்.

ஒரு ரன்/நான்கு ரன் எடுத்தால், மட்டை வீச்சாளரை புகழுந்து தள்ளுகிறது கிரிக்கெட் உலகம். ஆனால் ஒரு ரன் எடுக்கப்படா விட்டால், பந்து வீச்சாளரையோ/ பந்து காப்பாளரையோ புகழுவதில்லை.

இந்த மனநிலை என்பது ஒட்டுமொத்த சமூகத்திடமும் உள்ளது. கிரிக்கெட்டில் மட்டுமே தலைவிரித்தாடுகிறது என்று எண்ண வேண்டாம். சில உதாராணங்கள்:

ஆண், பெண் இருவரும் வேலை செய்தாலும்... ஆணை மட்டுமே, இச்சமூகம் முன்னெடுக்கிறது.

உடல் உழைப்பு மற்றும் மன உழைப்பு ஆகிய இரண்டிலும், இன்றும் மன உழைப்பு சார்ந்த வேலைகளே பெரிதாக எண்ணப்படுகின்றன.

மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு பொதுமனநிலையை, இச்சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

இவையெல்லாம் நவீனத்துவ பார்வையின் குறியீடுகள். இதை விடுத்து, பின்நவீனத்துவ பார்வையில், ஒரு செயலில் பங்கெடுக்கும் அனைவரும் பாராட்ட வேண்டியது அவசியமாகிறது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment