Friday, May 26, 2017

மாமியார்-மருமகள் சண்டை

நம் நாட்டில், தந்தை வழி சமூகம் பராம்பரியம் இருப்பதால் தான், மாமியார்-மருமகள் சண்டை அதிகமாக நடக்கிறது என்று நினைக்கிறேன்.
அதே..... தாய் வழி சமூகமாக இருந்திருந்தால், மாமனார்-மருமகன் சண்டை ஏற்பட தான் வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன்.

மேற்கண்ட இரண்டிலும், அதிகார பகிர்வு தான் பெரிய பிரச்சனை!!!
இந்தியாவில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள கூட்டாட்சியில் உள்ள பிரச்சனையை போல், குடும்பங்களிலும் அதிகார பகிர்வில் பெரும் பிரச்சனைகள் எழுகின்றன.

மேற்கண்ட இரண்டு உறவிலும், அதிகாரங்களை சரியாக பங்கீடுவது என்பது சாத்தியமானதா?? என்பதே கேள்வி குறி தான்!!!

அதனை தாண்டி.... முந்தைய மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கும் இடையேயான புரிதல்களும் வெகுவாக மாறியிருக்கின்றன.

மேற்கண்ட அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு, உளவியல் ஆய்வாளர்களே முடியாது. ஆதலால், அன்பை பொழிந்து.. .ஆதிக்க மனநிலையை விடுத்து.... குடும்பத்தை செவ்வழியே பேணி காப்போம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment