Wednesday, May 17, 2017

ரஜினி- சினிமா- அரசியல்

பள்ளி கூட நாட்களில்..... அந்த வயதிற்கே உரிய, என் மனதில் நாயகனாக வடிவம் எடுத்தவர் ரஜினிகாந்த் தான்!!! நான் விஜய், அஜித் காலத்தில் பிறந்திருந்தாலும் ரஜினி மீதான ஈர்ப்பில், நான் அடைப்பட்டிருந்தேன்.

இன்னும் சொல்ல வேண்டுமானால்...... பள்ளி கூடத்தை தாண்டி கல்லூரி வந்த பிறகு தான், சினிமா நடிக நடிகைகளை பற்றியே தெரிந்து கொண்டேன். பள்ளி கூட நாட்களில் , சினிமாவை காண்பதற்கு பொருளாதாரம் வழி கொடுக்காததால் , காதில் விழுந்த ரஜினியை தலைவனாக மனம் உள் வாங்கி கொண்டது.

கல்லூரி காலங்களிலேயே, வெளியுலகம் கற்பித்து வைத்த சூப்பர் ஸ்டார் என்னும் பிம்பத்தை, நிஜ உலகம் எளிதாக உடைத்து எறிந்தது. அதற்கு பிறகு சினிமா பிம்பங்கள் மீதான மோகம் வெகுவாக குறைந்து போனது.

இன்றைய நிலையில்.... ரஜினியின் மீதான ரசிப்பு தன்மையை விட வெறுப்பே அதிகம்!!! அதற்கு அரசியலே முதற்காரணம். ஆனால், நடிகன் என்ற நிலையில்... அவரது சினிமாவை காண்பதற்கு தவிர்ப்பதும் இல்லை.

என்னை பொறுத்தவரை.... எந்த சினிமாத்துறையை சார்ந்தவரையும், அரசியல்வாதியாக கண்பதில்லை விருப்பமில்லை. நடிகர்/கலைஞன் என்ற நிலையோடு நிறுத்தி கொள்வதே சரி!!! அது போன்று.... எந்த கலைஞனையும் தலைவனாகவும்/ ரசிகனாகவும் நினைத்தது இல்லை.

சினிமா துறை பொறுத்தவரை..... பிரகாஷ்ராஜ், பாவனா, வித்யாசாகர், ஸ்வர்னலதா, லாரன்ஸ், சமுத்திரகனி, பிந்து மாதவி என சில கலைஞர்களை.... அவரவர் துறையை சார்ந்து பிடிக்கும்.

-----------------------------------------------------------------------------

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய உரையாடல் என்பது தேவையில்லாத ஒன்றாகவே தெரிகிறது. அவர் அரசியல் வந்தாலும், எந்தவித மாற்றமும் எற்பட போவதில்லை.

அரசியலில் மாற்றம் என்பது இரு இடங்களிலும் நடக்க வேண்டும். அதாவது மேல்நிலை மற்றும் கீழ்நிலை. மேல்நிலையான அரசியல்வாதிகள் மட்டும் நல்லவனாக இருக்க வேண்டியது முக்கியம் என்றால், கிழ்நிலையான மக்களும் மாற வேண்டியது, அதை விட முக்கியம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment