Saturday, May 27, 2017

அரசியலமைப்பும் இனவாத அரசியலும்

அரசியலமைப்பு சட்டப்படி, இந்தியர் ஒவ்வொருவருக்கும் ஒற்றை குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் இரட்டை குடியுரிமை வழங்கப்படுகிறது. அதாவது மாகாணத்திற்கான குடியுரிமையும், மொத்தமான அமெரிக்காவிற்கான குடியுரிமை என இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.

இந்தியா என்பது பல்வேறு மதம், மொழி, இனம், சாதி, கலாச்சாரம் மற்றும் பண்பாடு என பல்சுவை கொண்ட நாடு. சுதந்திரம் அடைந்த பிறகே, ஒற்றை இந்தியா என்ற தொகுப்பு வடிவம் கிடைத்தது. இவ்வாறாக, பல்சுவையினால் பிரிக்கப்படாமலும், இந்தியர் அனைவரும் ஒருவரே என்ற எண்ணத்தை உண்டாக்கவே, ஒற்றை குடியுரிமையை அரசியலமைப்பு சட்டம் வழங்கியது.

ஏற்கனவே மதம், இனம் ,மொழி சார்ந்த பூசல்கள் நிறைந்த இந்திய நாட்டில் இரட்டை குடியுரிமையை வழங்கியிருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். அதனால் தான், பலமான மத்திய அரசு கொண்ட, அரை- கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்தியா பயணிக்கிறது.

இதில்குடியரசு தலைவர் முதல் பஞ்சாயத்து உறுப்பினர் வரை, அனைவரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்என்ற ஒற்றை தகுதியையே அரசியலமைப்பு சொல்லுகிறது. ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மனிதர்கள் மட்டும், ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆள வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக... அப்படி சொல்வது கூட அரசியலமைப்பிற்கு எதிரானதே!!!! ” 

மதச்சார்ப்பற்ற, சமத்துவ, சமநீதி, சகோரத்துவ, இறையாண்மை கொண்ட நாடுஎன்ற அரசியலமைப்பின் முன்னுரைக்கு அர்த்தம் இல்லாமல் போகும்.
ஒட்டளிக்கும் மக்களுக்கு, தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கு வழியே சேவை செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும்!!!! மற்றப்படி எல்லாமே அரசியலே!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment