மனித சமூகத்தினுள் நடக்கும், சாதி மத மோதல்களை பற்றி பேசி வருகிறோம். ஆனால், மற்றைய உயிர்கள் மீதான அத்துமீறலையும் அடக்குமுறையும் மனித இனம் நிறுத்தவில்லையே!!!!
இயற்கை படைப்பியலில், மனிதன் பகுத்தறிவை பெற்று உயிர்களிடத்தே உயர்ந்த நிலையில் இருக்கிறான். இன்றைய நிலையில், பரிணாம வளர்ச்சியில் உச்ச நிலையில் மனிதன் நிற்கிறான். நாளைய உலகம், மனிதனை விட அடுத்த நிலை பெற்ற உயரினமும் தோன்றலாம்.
ஒரறிவான உணர்வு பெற்ற மரங்களிலிருந்து, ஆறறிவு பெற்ற மனிதன் வரையிலான பரிணாம வளர்ச்சியில், கீழ்நிலையில் இருப்பகளை, மேலிடம் அத்துமீறவது இயற்கையாகவே அமைந்து விட்டது. அது போல் பண்பாட்டு ரீதியான, பொருளாதார ரீதியான கீழ் நிலையை பெற்ற இனத்தை, மேலினம், மிதிப்பதும் தொடங்கி விட்டது.
தாவரங்களை மான் தின்பதும், மான் இனத்தை மனிதன் உண்பதை உணவு சங்கிலி, உணவு வலை என்று பெயரிட்டு அழைக்கிறோம். ஆனால், மறைமுகமாக கீழ் நிலை உயிரினத்தின் மீது அத்துமீறலை உண்டாக்குகிறோம்.
இந்த உயிர்களில், பகுத்தறிவு பெற்ற மனிதன் மட்டுமே சிந்திக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறான். மற்ற உயிர்கள் சிந்திக்கும் ஆற்றலை பெறவில்லை. ஆனால் ,மனித இனம் சில ஆயிரம் ஆண்டுகளே மட்டும் கடந்திருப்பதால், மனித பகுத்தறிவு திறனும் இன்னும் முழுமையடையவில்லை என்று நினைக்கிறேன்.
மரத்தில் உள்ள ஆன்மாவும், புலி உள்ள ஆன்மாவும், மனிதனில் உள்ள ஆன்மாவும் ஒன்றே என்று கிருஷ்ணர் மகாபாரத்தில் சொல்வார். அதன்படி, இப்பூத உடல் பெறுகின்ற உடல் வடிவங்களே வேறுபடுகிறது. ஆன்மா மாறுபடுவதல்ல!!!
மனித இனக்குழுக்களில், மேல்நிலை மனிதன் கீழ்நிலையை அடிமைப்படுத்துவதற்கும், மனித இனம் மற்றைய உயிரினத்தின் மீதான அத்துமீறலுக்கு வித்தியாசம் ஒன்றுமில்லை!!!
முதலில் நாம் திருந்துவோம்!!!
பிறகு மற்றவரை திருத்தலாம்!!!
பிறகு மற்றவரை திருத்தலாம்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment