Tuesday, September 17, 2019

இடைநிற்றலும் 5 வகுப்பு பொது தேர்வும்


5 வகுப்பு மற்றும் 8 வகுப்பு பொது தேர்வு என்று தமிழக அரசு அறிவித்தது முதல்…. இடைநிற்றல் அதிகமாகும் என்று வாதமே முன்னிறுத்தப்படுகிறது. இந்த வாதமே பழமை வாத சிந்தனையாக தோன்றுகிறது.

1980 முன்னால்…. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கபடவில்லை. ஆதலால் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லையென்றாலும், பெற்றோர் கவலைப்பட போவதில்லை. ஆனால்இன்றோநிலைமை தலைகீழ்!!! மாணவன் போகவில்லை யென்றாலும்….. பெற்றோர் அடித்தாவது பள்ளிகளில் அனுப்பி வைக்கும் நிலையே அதிகம்!!!!

மேலும்….. இந்தியாவிலேயே இடைநிற்றல் குறைவாக உள்ள மாநிலம் தமிழகம்!!!

2013-14 ஆண்டில், இந்தியாவிலே 4 % குறைவாக இருக்கிறது. இன்றைக்கு நாளில் 1-2 % அளவிலேயே இருக்க வாய்ப்பு அதிகம்!!!

அதிலும் இந்தியாவில் இடைநிற்றலுக்கு காரணம் வறுமை தான்!!! கல்வியினால் உண்டாகும் அழுத்தம் என்பதெல்லாம்…. பெரிய காரணங்கள் அல்ல!!!!

இதெல்லாம் தாண்டி…. 2010 ஆண்டிலிருந்து கல்வி உரிமை சட்டம் வந்தது. ஆதலால் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது அரசின் கடமையாகும். எப்பாடியாவது குழந்தைகளை சேர்க்க அரசும் பெற்றோர்களும் நினைக்கவே செய்வார்கள்!!!!

இடம்பெயரும் தொழிலாளார்களின் குழந்தைகள் மட்டுமே பள்ளியில் சேராமலும்/ இடைநிற்றலும் அதிகமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பகுதியில் மட்டும் இடைநிற்றல் அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம்வறுமையும் விழிப்புணர்வு இல்லாததும்!!!!

பொது தேர்வு சார்ந்த மன அழுத்தம், இடைநிற்றலுக்கு காரணமாக அமையும். ஆனால் அதை விட இடைநிற்றலுக்கான வலுவான காரணங்கள் அதிகம்!!! ஆனால் அரசும் பெற்றோரும் …… அதை சரி செய்வார்கள் என்பது நிதர்சனம்!!!

இதையெல்லாம் விடுத்து…. பழமை வாத சிந்தனையிலே …. ஒரு வாதத்தை வைப்பதும் எங்ஙனம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment