Friday, August 23, 2019

பள்ளி மாணவனும் இரு சக்கர வாகனமும்


இன்று காலை மருத்துவமனைக்கு செல்லும் போது கண்ட காட்சி, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிலருக்கு …. இக்காட்சி சதாரணமாக கூட தெரியலாம்!!! பல நேரங்களில் தவறுகளை செய்து பழகி விட்டமையால், கால போக்கினால் தவறு கூட சரியாக தோன்ற ஆரம்பித்து விடுகிறது.

அது வேற ஒன்றில்லை!!! தனியார் பள்ளி கூட மாணவர் ஒருவர், இருசக்கர வாகனத்தை செலுத்தினார். முதல் ஒருவர் செல்லும் போது சரியாக கவனிக்கவில்லை. இரண்டாவதாக…… மற்றொரு மாணவர் செல்லும் போது கவனித்தேன்!!! ஆம்தனியார் பள்ளி மாணவன்!!!

பள்ளிக்கூடம் படிக்கும் மாணவனுக்கு, 18 வயது நிரம்பியிருக்க வாய்ப்பில்லை!!! 18 வயது குறைவானவர்களுக்கு லைசன்ஸ் வழங்கப்படுவதில்லை. அப்படியிருக்கையில் இது எப்படி???

மோட்டர் வாகன சட்டம் 2019 திருத்தத்தின் படி…. சிறுவர் வாகனத்தினை செலுத்தினால், பெற்றோருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கலாம். முன்பு தண்டதொகை மட்டுமே இருந்தது. இவ்வாறு சிறுவர்கள் வாகனம் செலுத்தும் போது வாகன விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றது.

மேற்கண்ட நிகழ்விலிருந்து…. இரு செய்திகள் தெளிவாகிறது. ஒன்று சிறுவர்களிடம் வாகன செலுத்துவதை பெற்றோர் தடுப்பதில்லை. இரண்டு. பள்ளி நிர்வாகம் சிறுவர்கள் வாகனம் செலுத்துவதை கண்டு கொள்வதில்லை. இரண்டுமே சமூகத்திற்கு கெடுதல்!!!

ஏற்கனவே வாகன விபத்துகள் அதிகமாக நடக்கும் நிலையில், இது மாதிரியான நிகழ்வுகள் தவிர்ப்பது அவசியம்!!! மனித உயிர்கள் விலை மதிப்பில்லாதவை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment