Sunday, August 11, 2019

போக்குவரத்து முன்னேற்றம்


உலக வாழ்வியல்..... மிக வேகமானது!!!! மிக குறுகிய காலத்தில் நடைபெறும் மாற்றங்கள் ஏராளம்!!! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சென்னைக்கு சென்றிருந்தேன். அதற்கு பிறகு…. கடந்த இரு வாரங்களில் சென்னைக்கு போகும் வாய்ப்பு கிட்டியது. சென்னைக்கு செல்லும் பேருந்துகளில் எவ்வளவு மாற்றம்??

உட்கார்ந்து செல்லும் நிலையிலிருந்து, சாய்ந்த நிலையில் உட்கார்ந்து செல்லும் நிலைக்கு பேருந்துகள் மாறின!!! அடுத்த நிலையானது படுக்கை வசதியான பேருந்துகளே அதிகம்!!!!

அது போல்பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகம். சின்ன சின்ன நகரங்களிலிருந்தும் பேருந்துகள் அதிகமாகி விட்டது. தாம்பரத்தில் பேருந்திற்காக சுமார் 1 மணி நேரம் காத்திருந்தேன். அந்த குறுகிய நேரத்தில் 100-150 பேருந்துகள் கடந்து சென்று விட்டன!!! வளர்ச்சி என்று எடுத்து கொள்வதா?? அல்லது அதிக வசதிகளை எதிர்பார்த்து சுற்றுப்புற சூழலை சீர்ழித்து கொண்டிருக்கிறமோ???? புரியவில்லை.

அரசு பேருந்துகள் இப்போது தான், படுக்கை வசதியை எட்டி பார்க்கின்றன. ஆனால் தனியார் பேருந்துகளில் சாய்ந்த இருக்கை நிலை அரிதாக காணப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள்…. எவ்வாறு காலத்திற்கு ஏற்றவாறு மிக வேகமாக மாற்றுகின்றன் என்று புரியவில்லை. தினமும் பேருந்துகள் முழுமையாகுவதில்லை!!! பல நேரங்களில் காலியாகவே செல்லுகின்றன!!!

நான்கு சக்கர வாகனங்களின் வருகை அதிகமான பிறகும், தனியார் ஆம்னி பேருந்துகளின் வளர்ச்சி மெச்சும் படியாகவே உள்ளது. வணிகம், வேலைவாய்ப்பு, சுற்றுலா என்று பல காரணங்களினால் தேவை இருக்கவே செய்கிறது.
முன்பெல்லாம் வெளியூர் பயணம் என்றால், புறப்படுவதே…… பெரிய நிகழ்வு போல் இருக்கும். ஆனால்இன்றோ…. கடையில் சென்று டீ குடிப்பது போல் ஆகி விட்டது.

ஆனால்விலைகளில் பல்வேறு மாற்றங்கள்!!! ஒரு ஊரிலிருந்து, ஒரே வசதி கொண்ட பேருந்துகளாக இருந்தாலும், 100-200 வரை வித்தியாசம் உள்ளது. இதை அரசு முறைப்படுத்துவது அவசியம்!!

ஒரு நாட்டின் உள்கட்டமைப்பில் போக்குவரத்து வசதி மிக முக்கியமானது. அந்த வகையில் இந்தியாவில் பயணியர் வாகன போக்குவரத்தின் பங்கு முக்கியமானதே!!! ஆனால்அவ்வளர்ச்சி மிக வேகமாக பயணிக்கும் போது அச்சம் கொள்வது தவிர்க்க முடியதாகி விடுகிறது!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment