Saturday, August 10, 2019

முன்னாள் மாண்வர் சந்திப்பு


முதுநிலை சித்த மருத்துவம் படித்து கொண்டிருந்த தருணம்……. சீனியர் மருத்துவர்கள் சேர்த்து, ஒரு முன்னாள் மாணவர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தினர். எனக்கு….. அந்த நிகழ்விற்கு, செல்லுமளவிற்கு விருப்பமில்லை!!! முன்னாள் மாணவர் சந்திப்பெல்லாம் வேணுமா?? என்று யோசித்து விட்டு விட்டேன்!!!. நட்பை/பாசத்தை துறந்து விட்டதாக அறிவு சொல்லியது!!!!

அந்த நிகழ்வு கடந்து, சில மாதங்களுக்கு பிறகு……. அதன் நிழற்படங்கள் முகநூலில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனை பார்த்த சில மணித்துளிகளில் மனம் எதோ செய்தது!!! கண்ணீர் துளிகள் கூட வந்தது!!! என்னை நானே ஏமாற்றி கொண்டிருந்த தருணம் புரிந்தது!!!

அந்த தருணத்தில் முடிவு செய்திருந்தேன். அடுத்த முறை முன்னாள் மாணவர் சந்திப்பு நடந்தால்….. நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டும்!!! இந்த முறை சில தடங்கல்கள் இருந்த போதிலும் கலந்து கொண்டேன்.

ஆம்!!! கடந்த சனிக்கிழமையன்று(07.09.19)கல்லூரி நிர்வாகம் முன்னாள் மாணவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இது குறித்த அறிவிப்பு வரும் போதே…. மனம் அகம் மகிழ்ந்திருந்தது.

வழக்கம் போல…. முதல் ஆளாய் நானும் தமிழ்குமரனும் கல்லூரிக்கு சென்றாயிற்று!!! சாய்ராம் கல்லூரியின் வளர்ச்சி பிரமிப்பு கொள்ளும் அளவிற்கு உள்ளது. நாம் படிக்கும் போதுஇதெல்லாம் இல்லையே?? என்ற மன புகைச்சலோடு சென்றேன்.

இதுவரை சாய்ராம் கல்லூரியிலிருந்துசுமார் 12 ஆண்டு மாண்வர்கள் வெளியேறி இருக்கிறார். அதில் முதல் பாதியில் உள்ளவர்களுக்கு, பின்பாதி மாணவர்களை அறிய முடியவில்லை!!! பின்பாதியில் உள்ளவர்களுக்கு முன்பாதியை அறிந்திருக்க இயலவில்லை!!! இந்த மாணவர் சந்திப்பை முன்பே நடந்திருந்தால், இதில் மாற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு!!!!

எனது வகுப்பில் இருந்து குறைவாக நண்பர்களே வந்திருந்தார். பல நண்பர்களை சந்தித்திலும், பேசுயதிலும் மகிழ்ச்சி!!! ஆசிரியர்கள் அனைவரும் சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி!!! அதே களிப்பு!!!! அதே நகைப்பு!!! பல சீனியர் மருத்துவர்களை எளிதாக கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் சூனியர் மருத்துவர்கள் அறிந்து கொள்ள கடினமாக இருந்ததுபல பேரை தெரியவில்லை!!!!

கல்லூரி ஆசிரியர்களின் வரவேற்பும், கவனிப்பும் மெய் சிலிர்க்க வைத்தது!!! உணவு உபசரிப்பு அதை விட சிறப்பு!!! மதிய உணவிற்கு பின்பு….. கல்லூரியை பார்வையிட்டோம்!!!

வகுப்புகளுக்கு சென்ற போது…. பல பழைய நினைவுகள் மனதில் வந்து போகின!!!
முதல் நாள் கல்லூரிக்கு சென்ற போது….. சற்று கால் தங்கியவாறே நடந்து சென்றேன். இரண்டு காரணங்கள்…. கல்லூரிக்கு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு….. சிறுவிபத்து ஏற்பட்டுகாலில் சிராய்ப்பு!!!! மற்றொன்றுஅன்று தான் முதன் முதலில் ஷீ அணிந்தேன்!!! இவ்வாறாக முதன் நாளே நோயாளியாகவே உள் நுழைந்தேன்.

அதோடு டைபாய்டு சுரமும் சேர்ந்து கொண்டது. கல்லூரி உலகம் ஹோம் சீக் என்றது. அந்த தருணத்தில்…. வகுப்பு பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து, புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரியிற்கு மாற்றப்பட்டது. புதிய வகுப்பில் தனியாக உட்காரும் நிலைக்கு தள்ளப்பட்டேன்!!! மூன்று வருசம் இதே நிலை தான்!!!! சரி அதை விடுங்க!!!!

அடித்த மொக்கை ஜோக்!!! சந்தித்த கேலிகள்!!! வகுப்பில் தூங்கியது!!!! கல்வி சுற்றுலாக்கள்!!! மூலிகை கண்காட்சி ஏற்பாடு செய்தது!!! மருந்து செய் கூடம்!!! வகுப்பு தலைவனாக வாங்கிய திட்டுகள்!!! மருத்துவ பயிற்சியில் அடித்த லூட்டிகள்!!!! கவிதை, குவிஸ் போட்டி!!! கானா உலகநாதன் குழு பாடல்!!! என ஆட்டோகிராப் சேரன் போல மன நிழற்படம் விரிந்தது.

எதுவும் தெரியாத தத்தியாக நுழைந்த என்னை….. வாழ்க்கை தந்த வலிகள் ஏராளம்!!! ஆனால்அதனை தகர்க்க......என்னை…. நானே உணர வைத்தது ” …. இக்கல்லூரி தான்!!! சிரம் தாழ்ந்த நன்றிகள்!!!

மனித வாழ்க்கையில்…. நிகழ்காலத்தினை சந்தோஷப்படுத்துவதற்கு, கடந்த காலத்தின் நினைவுகளும், எதிர்காலத்தின் எதிர்ப்பார்ப்புகளும் மிக முக்கியமானவை!!! அந்த நினைவுகளை அசைப்போடுவதை விட….. அந்த காலத்தின் மனிதர்களோடு சந்தித்து…. அசைப்போடுவது என்பது எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது!!!

இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்திற்கும்,.... முக்கியமாக முதல்வர் மதுகுமார் சார் அவர்களுக்கும், அனைத்தும் ஆசிரியர்களுக்கும் நன்றிகள் பல!!!

(முன்னாள் மாணவர்கள் சந்திப்பினை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தினால் சிறப்பாக இருக்கும். மாறாக, ஆண்டுக்கு ஒருமுறை நடத்தினால் சுவராசியம் போய் விடும்)

படம் உதவி: தமிழ்குமரன்…. தனியாக அமைந்த அதே பெஞ்சில்….

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment