Monday, August 19, 2019

மதுரை பயண அனுபவமும் சகுணமும்


நேற்றைய 24 மணி நேரம்……

அதிகாலை 2.50 மணி!!! அலாரம் அடிக்கிறது. ஆப் செய்து விட்டு மீண்டும் தூங்கி விட்டேன் (எப்படியும் 3 மணிக்கு அலாரம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் தான்). 10 நிமிட தூக்கத்தை கூட வீணாக்க கூடாதுல்ல!!! அதுதான்!!!

தீடீரென எடுத்த முடிவு தான்!!! மருத்துவ நண்பர்களுடன் சேர்த்து மதுரைக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தோம். மருத்துவ அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆயுஷ் காண்காட்சி என்று இரட்டை காரணங்கள் இருந்தன. மன்னார்குடி வரை இருசக்கர வாகனத்தில் பயணித்து….. பிறகு நான்கு சக்கர வாகனத்தில் செல்வதாக திட்டம்!!!!

நானும் இன்னொரு மருத்துவரும் இருசக்கர வாகனத்தில் பயணிக்க தொடங்கினோம். சிறிது தூரத்தில்…….. ஆந்தை ஒன்று சாலையில் அமர்ந்திருந்தது. பார்த்தவுடனே… “ சகுனமே நல்லாயிருக்கே?” என்று சர்கஸ்டிக்காக பேசினார். அப்படியா??? என்றேன். (எனக்கு இதை பற்றியெல்லாம் தெரியாது). காலை 11 மணிக்கெல்லாம் மதுரையை அடைந்தாயிற்று.

ஆயுஷ் கண்காட்சியை கண்டு களித்தோம்!!! சிறப்பான ஏற்பாடுகள், கண்காட்சி குழுவிற்கு பாராட்டுகள்!!! மருந்து கம்பெனியின் அரங்குகள், மூலிகை கண்காட்சி, மருந்து உபகரணங்கள் கண்காட்சி என கண்காட்சி அசத்தல்!!! ஜெய வெங்கடேஷ் சாரின் உழைப்பு தெரிகிறது. கடைசியாக…. மருந்து கருவிகள் செய்யும் ராகவன் சார் சந்தித்ததில் மகிழ்ச்சி!!! பல மூத்த மருத்துவர்களை பார்த்தில் சந்தோஷம்!!!

மதியம் சங்க கூட்டம் முடிந்து, மாலையில் கிளம்ப தயரானோம்!!! மழை பெய்ய ஆரம்பித்தது. ஆந்தை பார்த்த சகுனம் ஆரம்பித்து விட்டதோ?” என்று யோசனை வந்து சென்றது. காலம் செல்ல மழை அதிகமாகி விட்டது. இளையராஜா மெல்லிய இசை, கடிக்க முருக்கு, ஏசியின் குளிர் என உளகளிப்போடு மதுரையை விட்டு கிளம்பினோம்!!! மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க முடியவில்லை யொன்ற குறையோடு!!!

இரவு உணவு முடித்து….. மீண்டும் ஊருக்கு கிளம்புனோம்!! மறுபடியும் திருத்துறைப்பூண்டியில் கன மழை!!! ஒருபுறம் சந்தோஷமான இருந்தாலும், எப்படி வீட்டிற்கு செல்வது?? என்ற கேள்வியும் வராமல் இல்லை!!! ஆந்தை சகுனம் தான் காரணமோ???

இரண்டு மூன்று இடங்களில் நின்று, இரவு 12.30 மணிக்கு வீட்டிற்கு வந்தடைந்தேன்!!! வீட்டிற்கு அருகே….. நடு சாலையில் மற்றோரு ஆந்தை என்னை வரவேற்றது!!!

சகுனத்தில் நம்பிக்கையென்றாலும், நமக்கு கஷ்டம் வந்து விட்டதால், புத்தி பேதலித்து உண்மையென்று கூட தோன்றி விடுகிறது. மழை நல்லது யென்றாலும்… .நமகு பயணத்திற்கு தடை ஏற்படுத்துகிறது என்பதற்காக, ஆந்தையை கெட்ட சகுனத்தோடு இணைத்து விட்டோம்!!! இதே வீட்டில் இருந்தால் மழை சிறப்பாக வரவேற்றிருப்பேன்!!!

சூழ்நிலை ஒன்று தான்!!! பார்க்கும் பார்வைகள் தான் வேறு!!! மன புரிதல் வேறு!!! சகுன தடைகள் இயற்கையால் உருவாக்கப்படுவது அல்ல!!! மனித மூளைகளினால் ஏற்படுத்துவை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment