ஒரு
நாட்டின் வளர்ச்சிக்கு, அந்த நாட்டின் முதன்மையானவர்(பிரதமர் அல்லது குடியரசு தலைவர்) என்பவர் மிக முக்கியமானவர். அந்த தலைவரின் பிரதிபிம்பமே, அந்நாட்டின் பிரதிபிம்பமாக கருதப்படும். அந்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையே...... பாராளுமன்ற தேர்தல்!!!
ஒரு
சாதாரண குடிமகன், யார் முதன்மையானவர் என்று முடிவு செய்ய இயலாது என்றாலும், மக்களின் எகோபித்த ஆதரவு பெற்ற ஒருவரே..... ஆட்சி கட்டிலில் அமைய வாய்ப்பு கிட்டும். அதுவே நாட்டிற்கு நல்லது!!!
அதிலும்
இந்தியா போன்ற கூட்டாட்சி நாடுகளின் மாநில/மாகாண உரிமைகளையும் பேணி காப்பது போன்று ஆட்சி அமைய வேண்டும். நேரடியாக சொல்வதென்றால், தேசிய கட்சிகளும், மாநில/மாகாண கட்சிகளும் சேர்த்து ஆட்சி அமைக்க வேண்டும்.
மாறாக
முழுவதும் தேசிய கட்சி ஆட்சி அமைத்தால், மாநில நலன்கள் புறக்கணிக்க வாய்ப்புகளும் அதிகம்!!! அதிகார குவிப்பு நடக்கும்!!! கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அமையும்!!!
முழுவதும்
மாநில/மாகாண கட்சிகள் மட்டும் சேர்த்து ஆட்சி அமைத்தால், அரசியலில் நிலைப்பு தன்மை இருக்காது. முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. உலக அளவில் அந்நாட்டின் மதிப்பு குறைவாக மதிக்கப்படும்.
இதற்கெல்லாம்
சிறந்த மாற்று........ தேசிய கட்சிகளும், மாநில/மாகாண கட்சிகளும் சேர்த்து ஆட்சி அமைக்கப்பட வேண்டும். அதுவும் 75;25 என்ற விகித்தில் இருப்பின் முழுமை பெறலாம்....
உங்களில்
ஒருவன்
உங்களை போல்
ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment