Thursday, April 25, 2019

தாயா?, மனைவியா?? /பிறந்த வீடா? புகுந்த வீடா??


குடும்ப உறவுகள் மிக மெல்லியவை. மலை உச்சியில் நிற்பவை!!! சிறிது பிசகினாலும் உறவு மரணம்(பிரிவு) நிச்சயம்!!!!! அதிலும் புதிதாக திருமண உறவில் இணையும் தம்பதிகளின் சார்ந்த பிரச்சனைகள் அடுத்த லெவல்!!!

குடும்பத்தில் புதிதாக ஒரு பெண் நுழையும் போது, ஆண்/பெண் என இருவருமே தர்ம சங்கட நிலைக்கு வந்து விடுகிறார்கள்.

ஆணுக்கும் ...... தாயா?, மனைவியா?? என்று போராட்டம்!!! பெண்ணும்..... பிறந்த வீடா? புகுந்த வீடா?? என்று போராட்டம்.

தலைமுறை இடைவெளியும் பிரச்சனையை இன்னும் அதிகமாக்குகிறது. அதிலும் குடும்ப பிரச்சனைகளை பற்றிய அனுபவம் இல்லாத புதுமண தம்பதிகள், முடிவுகள் எடுக்க முடியாமல் திரிசங்கு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஒரு பிரச்சனை எழும் போது ஆண் மனைவிக்கு ஆதரவு அளிப்பதா?? தாயிற்கு ஆதரவு அளிப்பதா? என்று குழம்பி நிற்கிறான். இந்த தருணங்களில் மெளனமே பதிலாக இருக்கிறது. இரண்டு பக்கமற்று நியாய தராசாக நின்றாலும் பிரச்சனை தான்!!! சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பது சால சிறந்தது!!!

பெண்ணை பொறுத்து இதே நிலை தான்!!! ஆனால் புகுந்த வீடு வந்த பிறகு, பிறந்த வீட்டினை வைத்து ஒப்பிடுவது தவறான புரிதல்!!!!

வாழ்வது ஆணும் பெண்ணும் தான்..... !! அதில் இருபுறமும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்க தான் செய்யும்!!! விட்டு கொடுத்து வாழ்தல் மட்டுமே சுகமளிக்கும்!!! “ நான் பெரியவனா?? நீ பெரியவனா??? “ என்ற வெட்டி வார்த்தைகள் தலையீட்டால், குடும்ப வாழ்க்கை கேள்வி குறியே!!!

காலங்கள் செல்ல செல்ல...... குடும்ப கட்டமைப்பு தாண்டிய தனி மனித சுதந்திரம் முக்கியமாகி விட்டது. இதில் எது சரியென்று, கருத்தியல் ரீதியாக ஆயிரம் விவாதிக்கலாம்!!!

குடும்ப கட்டமைப்பு அடிமை தனத்தை கடைபிடிக்கிறது என்பது உண்மை!!! ஆனால் ஆணுக்கும் பெண்ணும், பெண்ணும் ஆணும் அன்பு சார்ந்து அடிமையாக இருப்பதில் தவறில்லை!!! வாழ்க்கை புரிதலை மேம்படுத்துங்கள்!!! வாழ்க்கை நயத்தை அனுபவியுங்கள்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment