Thursday, February 9, 2017

யார் நல்லவன் - கெட்டவன்

இப்பூலகில், எந்த மனிதரும் 100 சதவீதம் கெட்டவர்/நல்லவர் என்று குறிப்பிட, ஒருவரும் இல்லை என்பேன். ஒவ்வொருக்கும் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் என்ற இரண்டும் கலந்தே இருக்கும். இதில் எவை நல்ல குணங்கள் என்றும், எவை கெட்ட குணங்கள் என்பது கூட விவாத்திற்கு உட்பட்டதே!!!

நம்மால் நல்லவனாக நம்பக்கூடியவர் கூட, அதிகபட்சமாக 80 சதவீதம் மட்டுமே நல்ல குணங்களை பெற்றிருப்பார். அது போல் கெட்டவரும் 80-90 சதவீத கெட்ட குணங்களை பெற்றிருக்கலாம். சுமார் 10-20 சதவீத அளவிற்கு நல்ல குணங்களும் இருக்கும். இதனால் தான் கொலை, கொள்ளை செய்யக்கூடியவரை கூட, ஹிரோவாக அங்கிகாரம் செய்து, கொண்டாடி வருகிறோம் சினிமாவில்!!!

பல நேரங்களில், நல்ல மற்றும் கெட்ட குணங்கள் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபாடுவையாகவே உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர், மது அருந்துவரை, கெட்டவராக பார்த்த உலகம் போய், social drinker என்பதை ஏற்று கொள்ளும் அளவிற்கு வந்து விட்டது. வருங்காலத்தில் மது அருந்துவதை தவறில்லை என்று நிலை கூட வரலாம்.

எப்படி இருந்தாலும், நாம் பெரும்பாலும் ஒப்பிட்டு அடிப்படையிலே முடிவுகளை எடுப்போம்!!! மனவோட்டம் மற்றும் கால சூழ்நிலை என்பதெல்லாம், நம்மை அறியாமலே, நம் முடிவில் பங்கெடுப்பவை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment