கடந்த
100 நாட்களில், தமிழ்நாட்டு மக்களிடையே பிக்பாஸ் ஏற்பத்திய தாக்கம் அளவிட முடியாது.
அதே சம காலத்தில், நடந்த
பல நிகழ்வுகளை நம்முன்னே கொண்டு வராமல் தடுத்து
விட்டது என்பது மட்டும் உண்மை!!!!
தொலைகாட்சியின்
நிகழ்ச்சி பரிணாமங்களில் மற்றொரு படி நிலை
எனலாம். அடுத்தவரின் பிரிச்சனைகளை தெரிந்து கொள்வதில் மக்களுக்கு அளாதி ஆர்வமுண்டு. அதனை
ஆரம்ப காலங்களில் திரைப்படங்கள் பூர்த்தி செய்தன; அதன் பிறகு,
டிவி நெடுந்தொடர்கள் பூர்த்தி செய்தன. இதன் அடுத்த
படிநிலையாகவே சொல்வதெல்லாம் உண்மை, நிஜம் போன்ற
குடும்ப பிரச்சனை சார்ந்த தொடர்கள்!!! இதன்
வருங்கால படி நிலையாக, பிக்பாஸ்
அமைகிறது!!!!
நிகழ்ச்சியின்
தொகுப்பாளராக கமலின் பணி சிறப்பானது
என்பேன்!!! சொல்லப்போனால், இவர் இல்லாமல் இருந்தால்,
நிகழ்ச்சி தோல்வியை சந்திக்க கூட வாய்ப்புள்ளது!!! அறிவுரைகள்,
வாழ்க்கை புரிதல்கள், சினிமாவின் நினைவுகள் என அனைத்து நிலைகளிலும்
செவ்வானே பணியாற்றினார்.
அடுத்தது
போட்டியாளர்கள் !!!!! ஆண்களும் பெண்களும் சரிசமமாக 14 பேர் பங்கெடுத்தனர். அனைவருமே
ஏதேனும் ஒரு வகையில் சினிமா
துறையை சார்புள்ளவர்களே!!! அது சற்று சங்கடத்தை
ஏற்படுத்தியது. சினிமா துறையை தாண்டி,
விஞ்ஞானி, எழுத்தாளர், விளையாட்டு வீரர், தொழிற்முனைவோர், மருத்துவர்,
பொறியாளன் என அனைத்து துறையினை
சார்ந்தாக இருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்!!!!
ஆனால், இவர்களையெல்லாம் களம் இறக்கினால், மக்களிடம்
ஈர்ப்பு ஏற்படாது. மேலும் பிக்பாஸினால் பணம்
பார்க்க முடியாது; இது ஒர் வகையில்
வணிக நிகழ்ச்சி தானே!!!!
பிக்பாஸினை
திரைப்படமாக சித்தரித்து கொண்டால்….. முதற்பாகம் அருமை; இரண்டாவது பாகம்
பிளாப் எனலாம். அதற்கு முழு
முதற்காரணம் ஜிலி, பரணி, ஒவியா,
காய்திரி மற்றும் சக்தி ஆகியோரின்
வெளியேற்றமே!!!!
முதற் வாரத்தில், எந்தவித பிரச்சனை இல்லாமல்
தொடங்கினாலும், அடுத்தடுத்த வாரங்களில் சற்று சூடு பிடிக்க
ஆரம்பித்தது. முதன் முதலில் பரணி
வெளியேற்றமே மக்களின் உணர்ச்சி பிழம்பை ஏற்படுத்தியது; அடுத்தது
ஜிலி மற்றும் ஒவியா உரையாடல்
உள்ள பொய்கள் இரண்டு வாரத்தை
ஒட வைத்தது!!! அடுத்தது ஒவியா- ஆரவ் காதல்
எனவும், காய்த்ரி- சக்தி ஆதிக்க மனநிலை
மற்றும் குழு அமைத்தல் போன்றவற்றால்
முதற் பாகம் சிறப்பாக முடிந்தது.
ஒவியா,
பரணி என மக்களின் விருப்பம்
இல்லாமல், பிற காரணங்களால் வெளியேற்றப்பட்டதால்,
சில போட்டியாளர்களை சேர்க்க வேண்டிய அவசியம்
பிக்பாஸிற்கு ஏற்பட்டது. அதனால், மூன்று பெண்களையும்,
ஒரு ஆண் போட்டியாளர்களை இணைத்தார்
பிக்பாஸ்!!! அது ஏன் மூன்று
பெண்கள்!!!
காரணம்
எளிது!! பிரச்சனைகளை எளிதாக உண்டவல்லவர்கள் (பெண்கள்
சண்டைக்கு வந்து விடாதீர்கள்) !!!!! பிந்து
மற்றும் ஹரிஷ் பெரும்பாலும் அடக்கி
வாசிக்கவே செய்தனர்.
ஆனால்,
காஜலும் என்னவோ அடக்கி வாசித்தார்!!!
அவர் இன்னொரு காயத்ரியாக மாறுவார்
என்று எதிர்பார்த்த பிக்பாஸின் ஏமாற்றமே மிஞ்சியது!!! தனது பெயரை கெடுத்து
கொள்ள விரும்பாமல் அடக்கி வாசித்தார்!!! இதனால்
தான், ஜிலி, ஆர்த்தி மற்றும்
சக்தி ஆகியோரை திரும்ப அழைத்து,
இரண்டு வாரங்களையும் ஒட்டினார் பிக்பாஸ் ஆனால் சுஜா- சினேகன்
பிரச்சனைகள் கடைசி நேரங்களில் சிறிது
பயன்பட்டன!!!
தமிழில்
முதல் பாகம் அளவிற்கு, அடுத்தடுத்த
பாகங்கள் வெற்றியடையுமா??? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!!!!
முதற்பாகத்தை பார்த்த பிறகு, நிகழ்ச்சிக்கு
வர தயங்குவார்கள் அல்லது அப்படியே வந்தாலும்,
பிக்பாஸ் வீட்டில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்!!!
போட்டியாளர்களிடையே சண்டை மூட்ட பிக்பாஸ்
நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கலாம்!!! பொறுத்திருந்து
பார்க்கலாம்!!!
பிக்பாஸின்
மக்கள் மனதில் நிற்கும் வெற்றியாளார்
என்றால் ஒவியா தான்!!! ஆனால்,
அதே அளவிற்கு மனதினுள் ஒன்று வைத்து புறணி
பேசாதவர்கள் குறைவு!!! பிந்து, ஹரிஷ், ஆரவ்
போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லலாம்!!! அதிலும் சிலர் நல்லவராகவும்
நடிக்க செய்தனர்!!!
ஆர்வ் வின் வெற்றி குறித்து
சில சர்ச்சை இருக்கிறது. அதில்
உண்மை இருக்கலாம் என்று தோன்றுகிறது. கடைசியாக
உள்ள நால்வரில் சினேகன் மற்றும் ஆரவ்
ஆகிய இருவருக்கும் இடையே அதிக போட்டி
இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்!!! சினேகன் கட்டிபுடி வைத்தியர்
என்ற விமர்சனத்தை தாண்டி, பெரியளவில் சர்ச்சைகளுக்கு
உள்ளாகதாகவர். மேலும் குடும்ப அமைப்பில்
சிறந்த நிர்வாகியாகவும், பல பிரச்சனைகளை தெளிவாகவும்
கையாண்டர். அதே போல், ஆர்வ்
– ஒவியா காதல்(?) தாண்டி, ஆர்வ் மீது
எவ்வித சர்ச்சையும் இல்லை!! என்னை பொறுத்த
வரை சினேகன் வெற்றியாளராக இருந்திருக்கலாம்!!!
ஆர்வ் தான் உண்மையான வெற்றியாளர்
என்றால், இளைய வயது பெண்கள்
அதிகமாக வாக்களித்தார் என்று எடுத்து கொள்ளலாம்.
இல்லையென்றால், ஒவியா மீதான அன்பை
ஆர்வ்விற்கு ஒட்டுகளாக மாறியிருக்கலாம்., இல்லையென்றால், விஜய் டிவியின் சித்து
விளையாட்டாக இருக்கலாம். எல்லாம் அவன் செயல்!!
கடைசியாக
…. பிக்பாஸினால் சமூகத்திற்கு என்ன நன்மை ??? என்ற
கேள்வி எழுகிறது!!! அதை நீங்கள் எப்படி
எடுத்து கொள்கிறீர்கள்/ புரிந்து கொள்கிறீர்கள் என்பதை வைத்தே பொறுத்தே
அமையும்!!! மற்றப்படி மிகுந்த நன்மை என்று
புகழ்ச்சியும், சுத்த வேஸ்டு என்ற
இகழ்ச்சியும் தேவையில்லை!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment