கோலம் போட வேண்டும் என்றால்,
ஒரு புள்ளியிலிருந்து தான் தொடங்க வேண்டும்.
ஆனால், அத்தொடக்க புள்ளியை, எவ்விடத்தில் ஆரம்பித்தேன் என்று எனக்கே தெரியவில்லை!!!
சித்த மருத்துவ அலுவலர் தேர்விற்காக அறிவிப்பு
வெளிவந்த உடனே, நண்பர்களுக்காக தொலைபேசி
வழியாக கேள்விகளை கேட்கலாம் என்று எண்ணியிருந்தேன்!!!
நடைமுறை
சாத்தியங்களை, ஒப்பிட்டு பார்க்கும் போது, நிறைய பிரச்சனைகள்
இருந்ததை உணர்ந்தேன். ஆதலால், பாடம் வரியாக
வினாக்களை எடுக்கலாம் என்று எண்ணி ஆரம்பித்தேன்.
ஆனால்
,அனைத்து பாடங்களையும் எடுப்பேன் என்று நம்பிக்கையில்லை!!! ஆனால்
மாதிரி வினாத்தாள் வரை சிறப்பாக முடித்து
விட்டேன் என்று எண்ணி கொள்கிறேன்!!!
வினாத்தாள்
எடுப்பதற்கு, காரணம் நண்பர்கள் மட்டுமல்ல!!!
அதை தாண்டிய வெளி காரணம்
உண்டு. அது பொதுவெளியில் வேண்டாம்
.உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்!!!
இது சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு
உதவும் என்று எண்ணுவதில் உடன்பாடில்லை!!!
தனி மனித வாழ்வியல் பொருளாதார
வளர்ச்சிக்கே உதவும் !!! பொது நல சேவை
என்பதெல்லாம் போலி பிம்பங்களே!!!
தேர்வுக்கு
எப்படி படிப்பது, எவ்வகையில் ஆரம்பிப்பது, அதன் வரும் பிரச்சனைகளை
களைவது எப்படி??? போன்ற ஆயிரம் ஆயிரம்
கேள்விகளை உடைய மருத்துவர்களுக்கான சிறிய
தூண்டிலே!!! பயிற்சி மையங்கள் செல்ல
முடியாதவர்களுக்கு சிறிய முன்னெடுப்பு!!! குடும்ப
வாழ்க்கையில் இருந்தாலும், இருக்கும் நேரத்தில் சிறப்பாக படிப்பதற்கான சத்திராயுதம்!!! இதை தாண்டி ஒன்றுமில்லை
மாதிரி
வினாத்தாளிற்கு உதவிய மருத்துவர்கள் வித்யாபதி
மற்றும் விக்ரம் குமார் ஆகிய
இருவருக்கும் நன்றிகள்!!! இச்செயலுக்கு ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!!
மொத்த வினாத்தாளையும், ஒன்று திரட்டி, மின்னூல்
வெளியிட திட்டமிட்டுள்ளேன்!! வருங்கால தேர்வுகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்!!!
இதற்கு
இடையேயும், சில வன்சொற்களும் வந்து
விழுந்தது.. “ இவ்வளவு கேள்விகளை எடுக்கும்
அளவிற்கு வெட்டியாகவாக இருக்கிறாய்??” என்பது தான்!!!
எனக்கான
பணிச்சுமை அதிகம் தான்!! அன்றாட
அலுவல்களை கடந்து, வார இறுதி
டின்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச வகுப்பும் எடுத்து
கொண்டிருக்கிறேன். மருத்துவமனையின் சார்பில், 10-15 பள்ளிகளுக்கு நிலவேம்பு குடிநீரும் வழங்கி உள்ளேன்!!!
இருக்கின்ற
நேரத்தை சிறப்பாக பயன்படுத்தினேன்!!! பெரும்பாலும் இரவு 11-12 மணிக்கு தான் தூங்க
செல்வேன்!!! தமிழில் கணிணியில் தட்டச்சு
மிகவும் எளிது!!! இதனால் தான் என்னால்
விரைவாக செய்ய முடிந்தது... வாங்கிய
சில புத்தகங்களும், வார பத்திரிக்கைகளும், தினசரிகளும்
அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கிறது, படிக்க படாமல்!!!
“ வாழ்க்கைன்னா
சில அடிகள் வீழத்தான் செய்யும்,
அதை தட்டி விட்டுட்டு போய்கிட்டே
இருக்கணும்!!!” என்று கடந்து செல்ல
வேண்டியது தான்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment