பன்னெடும்
காலமாக, ஆசிரியரின் மீது அசுசை இருப்பது
உண்மை. அந்த எண்ணம் இப்போது
தொடங்கியது அல்ல!!! பள்ளிக்கூட நாட்களிலேயே
தொடங்கிய புரிதல்.
என்னுடைய
உறவினர்கள் பல பேர் ஆசிரியர்
பணியை தேர்ந்தெடுத்து பணியாற்றி கொண்டிருப்பவர்கள். ஆதலால், என்னையும் ஆசிரியர்
பணிக்காக படிக்க சொல்லி வற்புறுத்தல்களும்
நடந்தது. ஆனால், என் மனம்
வளைந்து கொடுக்கவில்லை.
இப்புரிதலுக்கான
காரணங்களை, இருவகையான பிரித்து புரிந்து கொள்ள முயல்கிறேன். ஒன்று
அக காரணம், மற்றொன்று புற
காரணங்கள்!!! புற காரணங்களுக்கான விளக்கங்களை,
நான் சொல்லி புரிய வைக்க
வேண்டிய அவசியமில்லை!! ஆனால் அக காரணங்களை,
நான் தான் விளக்க வேண்டும்.
எந்தவொரு
விஷயத்தினை, என்னால் எளிதாக புரிந்து
கொள்ள இயலும் (அப்படி தான்,
நான் நினைத்து கொண்டிருக்கிறேன்). ஆதலால், ஒரு விஷயத்தை
விளக்கி சொல்லி கொடுக்கும் ஆசிரியரின்
செயல், எனக்கு தேவையில்லாமலே போய்
விட்டது!!!
இதற்கு
நேர் எதிராக, எனக்கு தெரிந்த
விஷயத்தை, மற்றொருவருக்கு விளக்க தெரியாது!!! என்னுடைய
மிகப்பெரிய மைனஸாகவே கருதுகிறேன். இதனால் ஆசிரியர் தொழிலுக்கு
செல்லவும் விருப்பமில்லை!!!
இதனை முழுவதும் உடைத்தெறிய வேண்டும் என்ற எண்ணினேன். அதற்கு
ஏற்றாற் போல், வார இறுதி
நாட்களில், இலவச TNPSC பயிற்சி வகுப்புகளை எடுத்து
கொண்டிருக்கிறேன்!!!
இந்த இலவச வகுப்புகளால், சிறிதளவு
மனநிம்மதியை பெற முடிகிறது. அது
போல், பிறருக்கு கற்பிக்கும்/விளக்கும் திறனை மேம்படுத்தி உள்ளேன்!!!!
இன்னும் அதிகப்படுத்த வேண்டும். ஆனால், ஆசிரியர் தொழிலின்
மீதான அசுசை மட்டும் இன்னும்
மாறவில்லை!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment