Thursday, July 31, 2014

என்ன அது???

மரண தருவாயில் உள்ள மனிதனின் மனதுக்குள்ளே நடக்கும் உரையாடல் இது. இறைவனிடம் சேர்பிக்க, எமனின் பாச கயிறும் தயாராக இருக்கிறது
கடவுள் நீ நல்லவன் தான்!!! ரொம்ப நல்லவன் தான் நீ!! நான் என்ன கேட்டாலும், அதை எனக்கு தந்திருக்கிறாய். அதனால், நீ ரொம்ப நல்லவன்.

நான் பிறந்த போது, தாயின் பாலை எனக்கு அளித்து, நல்லுடலை அளித்தவன் நீ!!!! இப்போது உள்ளது போல் பாக்கெட் பாலையும் புட்டி பாலையும், எனக்கு நீ தரவில்லை!!

நான் வளர்ந்த போது, என்னை அன்போடு வளர்த்த தாய் தந்தையை தந்தவன் நீ!!! இப்போது உள்ளது போல், அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போய், செவிலி தாயிடம் நான் வளரவில்லை!!!. என்னுடைய முதல் பேச்சையும், நான் குப்பிற விழுந்து முதல் முதலில் நடந்ததையும் பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் பெற்றோர்கள்.

நான் ஐந்து வயது வரை புழுதி மனதில் ஒடி விளையாடி, நன்றாக சிறு வயது பொழுதை களித்தவன். மண்ணை கூட காணாமல், play school, Kindergarten போன்றவற்றை காணாமல் வளர்த்தவன் நீ!!!.

பள்ளி கூடங்களில் கூட அதிகம் கஷ்டப்படாமல், எளிதாக படித்து தேர்ச்சி பெற்றவன் நான்!!!. நல்ல வேளையாக, டியூசன் போன்ற பல கொடுமைகளை எனக்கு நீ கொடுக்கவில்லை!!!.

பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்றதனால், ஆசிரியர் பயிற்சி படிப்பை அரசு செலுவிலே எளிதில் படிக்க வைத்தவன் நீ!!!. மருத்துவம், இஞ்சினியர் போன்ற படிப்புகளை எனக்கு சொல்லி தரவில்லை நீ!!!.

அந்த ஆசிரியர் பயிற்சி படிப்பில் கூடஎன்னை காதல் கடலில் தள்ளி விட்டு, காதலி கழுத்தில் மூன்று முடிச்சு இட வைத்தவனும் நீயே!!!. அதற்கு பெற்றோரை சம்மதிக்க வைத்தவனும் நீ.

இருவருக்கும் அரசு கிடைத்த போதும், மனையாள் வேலையை உதறி விட்டு, எனக்கு வரும் பணிக்கொடையை கொண்டே குடும்பம் நடத்த தயார் என்று சொல்ல வைத்தவன் நீ. இரண்டு பேரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை நீ உருவாக்கவில்லை!!!.

பெற்ற தாய் தந்தையின் மீதும், வந்த மனைவியின் மீதும் பண்பும் பாசமும் நிலைக்க வைத்தவன் நீ!!!. இதை விட வேறென்ன வேண்டும், ஒரு ஆண்மகனுக்கு!!!!

நான் நினைத்ததை விட அதிகமாகவே, மூன்று ஆண் மகன்களையும், ஒரு பெண் மகவையும் தந்தவன் நீ!!! அதையும் பண்பும் பாசமும் பொருந்தியவர்களாக அளித்தவன் நீ!!!.

பெற்ற பிள்ளைகளை, நன்றாக படிக்க வைத்து, அவர்கள் நினைத்த வேலையை அளித்தவன் நீ!!!.

மாற்று சாதி, மதமாக இருந்தாலும் பிள்ளைகளின்  மண வாழ்க்கையை சிறப்பாக அமைக்க மன தைரியம் தந்தவன் நீ!!!. பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பளிக்காமல் காத்தவன் நீ!!!

பேரன் பேத்திகளை, எங்கள் மடியில் வைத்து தாலாட்ட வாய்ப்பு கொடுத்தவன் நீ!!!. உப்பு மூட்டை ஏற்றியும், அவர்களின் சிறுநீரால் முகத்தை அபிஷேகம் செய்ய வைத்தவன் நீ!!!.

இத்தனையும் கொடுத்து, உலகத்தோர் பொறாமை பட வைத்தவன் நீ!!. பெருமைப்படுத்தியவன் நீ!!!. இறைவன் எல்லாவற்றையும் எனக்கு அளித்து இருந்தாலும், எனக்குள் ஏதோ மனக்குறை இருப்பதாக உணர்கிறேன். அதை என்னால் கண்டுபிடிப்ப முடியவில்லை. அது என்னவென்று தெரிந்திருந்தால், உன்னிடம் கேட்டுருப்பேன். அதையும் நீ அளித்திருப்பாய்!!!

எமனின் பாச கயற்றால், கட்டப்பட்டு மேலோகம் செல்லுகையில், ”எமனிடமே கேட்டு விட்டால் என்ன???....” என்று நித்திக்கிறேன். என் கதையை கேட்டவன், “ நீ தேடி கொண்டிருப்பதன் பெயர் நிம்மதி’ …” என்றான் எமன். அதை ஏன் கடவுள் எனக்கு அளிக்கவில்லை?....” என்றேன். அதற்கு எமன், ” பொருள் வேணும்…..நல்ல வேலை வேணும்…. நல்ல மனைவி வேணும்….நல்ல பிள்ளைகள் வேணும் என்று கேட்ட நீ…. நிம்மதியை கடவுளில் கேட்கவில்லையே….. கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்…” என்றான்.  

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


No comments:

Post a Comment