இரண்டு
நாளைக்கு முன்னர், மூஸ்ஸிம்
நண்பர் ஒருவர் என்னுடைய கிளினிக்கு வந்தார். அவருடைய உடல் உபாதைகளுக்கு, சில மருத்துவ ஆலோசனைகளை வழங்கினேன். நோன்பு
முடிந்த பிறகு, மருந்துகளை
வாங்கி கொள்வதாக கூறினார். சில பொதுவான உடல்நலம் குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.
படித்த விஷயங்கள், உணர்ந்த
விஷயங்களை கொண்டு, அவருடைய
கேள்வி கணைகளுக்கு விடை அளித்தேன்.
”நீங்கள், இவ்வளவு தெளிவாக பேசுறீங்க, சில தனிப்பட்ட விஷயங்களை கேட்கலாமா? ” என்று பொடி வைத்து பேசினார். (நம்மள இன்னுமா, இந்த உலகம் நம்புது என்று மனதில் நினைத்து
கொண்டு). ”ம்ம்ம்….சொல்லுங்கள், எனக்கு தெரிஞ்சத சொல்றேன்” என்று எதிர் பதில் அளித்தேன்.
” ஏன் சார்
கல்யாணமான உடன் பொண்ணுங்க, தனியே போக
ஆசைப்படுறங்க???...” என்று
கேட்டாரேரேரேர ஒரு கேள்வி. அவரிடமிருந்தும் இந்த மாதிரியான கேள்வியை நான்
ஏதிர்பார்க்கவில்லை. வெளி காட்டி கொள்ளாமல், நீயா, நானா பார்த்த தகவல்களை கொண்டு, சில தகவல்களை சொன்னேன். கல்வி கொடுத்த பெண்
சுதந்தரத்தை,பெண் தவறாக
புரிந்து கொள்ளும் போதும், மாமியார், மாமனாரால் தன்னுடைய சுதந்திரம்
பாதிக்கப்படும் என நினைக்கும் போதும், சகிப்பு தன்மை
இல்லாத போதும், வாழ்க்கையின்
நோக்கத்தை பற்றிய புரிதல் சரியாக இல்லாத போதும், தன்னை சுயமாக சிந்திக்க விடமாட்டர்கள் என
பெண் நினைக்கும் போதும் மங்கையாளவள் தனி குடித்தனத்தை சிந்திக்கலாம் என்றேன்.
அடுத்து என்ன
கேள்வி கேட்பார் என்பதை, என்னால்
ஊகிக்க முடிந்தது. “ இப்போது தான் சம்பாதித்து வீட்ட கட்டினேன், வாங்க! தனி குடித்தனம் போகலாம் என்கிறாள், எப்படி இதை தடுப்பது?? “ என்றார்.(கல்யாணம் ஆனவங்களே, எப்படி
சாமளிக்கிறதுன்னு தெரியாத பிரச்சனை, என்னிடம்
கேட்டால், எனக்கு எப்படி
தெரியும் என மனதில் நினைத்து கொண்டு). தனி குடித்தனத்தை தடுப்பதற்கு, இரண்டு விதமாக முயற்சி செய்யலாம் என்பது
என்னுடைய திண்ணம். அதை அவரிடம் எடுத்து கூறினேன்.
பெண்கள்
கூட்டு குடித்தனம் இருப்பதால், என்ன வகையான
நன்மைகள் இருக்கிறது என்பதை மனைவியிடம் விளக்க வேண்டும். அதே மாதிரி தனி
குடித்தனம் போவதால், பெண்கள் என்ன
மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்பதை விளக்கலாம். உதாரணமாக, தனி குடித்தனத்தில் குழந்தைகள்
பாரமரிப்பதில் இருந்து துணி துவைப்பது வரை அனைத்து வேலைகளையும் பெண்ணே செய்ய
வேண்டிய அவசியம் வரும். அதே சமயத்தில், கூட்டு
குடித்தனத்தில், வேலை பளூ
நிறைய குறையும்.
தனி
குடித்தனம் என்றாலும், கணவன் வீடு
அல்லது மனைவி வீட்டை சார்ந்து வாழ வேண்டி தான் உள்ளது. அதிலும் மனைவி, தன் தந்தை வீட்டிற்கு அருகாமையிலே தனி
குடித்தனம் போக ஆசைப்படுவார். பெண் வீட்டார் ஒத்தழைப்பு கொடுக்க மறுத்தாலே, தனி குடித்தனம் போவதை பெண்கள் விரும்ப
மாட்டார்கள்.
எனக்கு
தெரிந்த யோசனைகளை சொல்லி அனுப்பினேன். பொதுவாக பிரச்சனைகளை அணுகும் முறைகளை வைத்து, அந்த யோசனைகளை கூறினேன். சரியாக இருக்கும்
என்று உறுதியாக சொல்லி முடியாது .ஆனால், வந்த நண்பர்
தனி குடித்தனம் போவதை எப்படியும் தடுத்து விடலாம் என்பதை நம்பிக்கையுடன் விடை
பெற்றதை, முக பாவனை
மூலம் அறிந்து கொண்டேன்.
கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்னர், நண்பர் கேட்ட
கேள்வி நினைவிற்கு வந்தது. ”பெண்கள்
கல்யாணமான உடன், தன் கணவன்
வீட்டிற்கு செல்கிறார்களே, தான் வளர்ந்த
வீட்டை விட்டு பிரிவது வருத்தமாக இருக்காதா?” என்று நண்பர் கேட்டார். ”திருமணம் நடந்தவுடன், தன் கணவன் வீட்டிற்கு செல்வது சமுதாயத்தின்
கட்டமைப்பாக உள்ளது. எனவே மங்கையாளவன், தன் மனதை
தயார் படுத்தி கொள்வர்” என்று
நண்பனுக்கு பதிலளித்தேன். இப்படி பட்ட மனிதர்களும் இப்பூலகில் வாழ்கின்றனர்.
தனி
குடித்தனம் என்ற பிரச்சனை தலையெடுத்தாலே பெரிதும் பாதிக்கப்படுவதும் ஆண்கள்
என்பதும் மட்டும் உண்மை. பெற்று வளர்த்த தாய், தந்தையை விட முடியாமலும் தன்னை நம்பி
வந்தவளை தவிர்க்க முடியாமலும் ஆண்கள் அடையும் மன வேதனை சொல்ல முடியாத ஒன்று.
சாலமன் பாப்பையா வைத்து பட்டிமன்றம் நடத்தினாலும் விடை தெரியாத வினா தான் இது
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை
குமார்|||||||||||||||||||||
No comments:
Post a Comment