Thursday, August 3, 2017

படிப்பது எப்படி??


 போட்டி தேர்வுகளுக்கு படிப்பது என்பதே தனி கலை என்பேன்!!! படிப்பு முறைகள் 4 நிலைகளாக பிரிக்கலாம்!!!

முதல் நிலை

இந்நிலை கதை/.நவாலை படிப்பதற்கு ஒப்பும். அதாவது கருத்தை உள்வாங்கி கொள்ள வேண்டும் . மானப்பாட செய்ய வேண்டியதில்லை!!! ஆயுஷ் மருத்துவர்களுக்கு இந்நிலை என்பது தேவையில்லாத ஒன்று என்று நினைக்கிறேன்.

இரண்டாவது நிலை

முதல் நிலையில் உள்வாங்கியதை, மானப்பாடம் செய்தலே!!! அதிலும்எப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வாய்ப்புண்டுஎன்ற படிக்க வேண்டும். புத்தக பின்பக்க வினாக்களை பார்ப்பது அவசியம். நண்பர்களுக்குள் கேள்வி கேட்பது அவசியம். இந்நிலையின் முடிவில், குறுந் தேர்வுகள் எழுதினால் நன்று.

மூன்றாவது நிலை

இன்னும் சற்று அழமாய் படிக்க வேண்டும். படிக்காமல் விட்ட பகுதிகளையும் சேர்த்து படித்து விட வேண்டும். பழைய மாதிரி வினாக்களை பார்க்க வேண்டும். நண்பர்களுக்குள் கேள்வி கேட்பது அவசியம். குறுதேர்வின் அடிப்படையில் கேள்வி கேட்கும் புரிதலை அதிகப்படுத்த வேண்டும். இறுதியில், மாதிரி தேர்வு எழுதப்பட வேண்டும்.

கடைசி நிலை

தேர்வு எழுவதற்கு முன்னர் உள்ள 5-7 நாட்களை குறிப்பதாகும். கேள்விகள் கேட்க கூடாது. கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால், தாழ்வு மனநிலையும்/அவநம்பிக்கையும் உண்டாகும். புதியதாக எப்பகுதியையும் படிக்க வேண்டாம். புத்தகங்களின் பக்கங்களை திருப்பினாலே போதும். மனதில் பதிந்த பக்கங்கள் ஒளிப்படமாய் வந்து நிற்கும்.

மேற்கண்ட நான்கு நிலைகளில், முதல் நிலை இத்தேர்வு தேவையில்லை. ஆதலால்…. மற்ற மூன்று நிலைகள் மூன்று பாகங்களாக பிரித்து கொண்டு, திட்டத்தை தயாரிக்கலாம். இரண்டாவது நிலைக்கு 30 நாட்களும், மூன்றாவது நிலைக்கு அடுத்த 30 நாட்களும், கடைசி நிலைக்கு 7 நாட்களும் எடுத்து கொள்ளலலாம்.

மேற்கண்ட அனைத்திலும் முக்கியமானது….. எந்ததெந்த வகையில் எல்லாம் கேள்விகள் கேட்க வாய்ப்புண்டே, அந்த பார்வையில் படிக்க வேண்டியதே!!!! இப்புரிதலில் படித்தாலே, தேவையில்லாத பல மானப்பாடங்களை தவிர்க்கலாம். .காதாதுவில்- பற்ப செந்தூரத்தில், பல சாறுகள் கொடுக்கப்பட்டிருந்தால், அதை தவிர்க்கலாம்.

படிப்பதை தாண்டிஅப்பாடங்களை 2-3 நபர்கள் சேர்ந்து குழுவாக விவாதிப்பது சிறந்தது!!! ஒரு மணி நேர விவாதம் என்பது மூன்று மணி நேர படிப்பற்கு சமம்!!! அது கேள்வி கேட்பதாக இருக்கலாம் அல்லது விவாதமாக இருக்கலாம்!!!

அதுவும் துக்கம் வரும் நேரங்களில் செயல்படுத்துவது இன்னும் சிறப்பு!!! மதியம் 2 மணியாக இருக்கலாம்!!! இரவு 10 மணியாக இருக்கலாம்!! அந்த ஒரு மணி நேரத்தில் 1000 கேள்விகள் உங்களை சென்றடையும். சக மருத்துவர்களின் கேள்வி குறித்த புரிதலும் இருக்கும்!!! என்னுடைய வெற்றிகளுக்கு இது முக்கிய காரணமென்பேன்!!!

மாதிரி தேர்வின் போது கூட, 2.30 மணி நேரத்தில் 200 கேள்விகள் மட்டுமே காண முடியும். ஆனால், அதே மணி நேரத்தில், குழு படிப்பில் 2000 கேள்விகள் வரை பெற இயலும்.

உங்களது படிப்பு எல்லையை, படிக்கிற பாடத்தோடு மட்டும் நிறுத்தி வீடாதீர்கள். படிக்கும் பாட குறிப்புகளை, மற்றைய பாடங்களோடு ஒப்பிட்டு படியுங்கள்!!!

மனப்பாடம் செய்வதற்கு ஏதுவாக formula போட்டு படிப்பது வழக்கம்!!! ஆனால், அந்த formula, மனப்பாடம் செய்யும் அளவிற்கு இருந்தால் நன்றன்று!! Formula மிக எளிமையாகவும், எளிதில் புரியும் படி இருக்க வேண்டும்.

படிக்கும் போது மிக முக்கிய குறிப்புகளை அடி கோடிட்டு கொள்ளுங்கள். அதற்கான பக்கம் முழுவதும் கோடாக இருந்தால் எரிச்சல் உண்டாகும். மேலும் கலர் கலராக அடி கோடு இடாதீர்கள். படிக்கும் போது எரிச்சல் அதிகமாகும்!!! பென்சில் ஒன்றே போதுமானது!!!
(தொடரும்)

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment