Saturday, August 5, 2017

குரூப் 2 தேர்வும், எமது ஆசிரியர் பணியும்


நாளைய தினம் TNPSC Group 2 A எழுதும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்!!!!

நான் இம்முறை தேர்வு எழுத போவதில்லை என்றாலும், சற்று படப்படப்பு இருக்கவே செய்கிறது. இதுகாறும் போட்டியாளர் என்ற நிலையில் இருந்து, பயிற்றுனர் என்ற நிலையை எட்டியுள்ளேன்!!!

சித்த மருத்துவ அலுவலராக பணியில் இணையும் வரை, Group I எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது!!! ஆனால், பணியில் இணைந்த பிறகு, ஆர்வத்தை விட்டு விட்டேன்!!!!

சரி படித்த விஷயத்தை, மற்றவருக்கு கற்று கொடுக்கலாமே என்றொரு எண்ணம் உதித்தது. அதற்கு வார விடுமுறை உபயோகித்து கொள்ளலலாம் என்று எண்ணியிருந்தேன்.

அதற்கு ஏற்றாற்போல், ஒரு வாய்ப்பும் அமைந்தது. ஏற்கனவே தகட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில், அன்பு பாரதம் இலவச பயிற்சி மையத்தை குட்டியப்பன் சார் நடத்தி வந்தார். அதில் என்னையும் இணைத்து கொண்டேன்.

புதியதொரு முயற்சி!!! ஆசிரியர் பணி என்றால் எனக்கொரு ஒவ்வாமை எப்போதும் உண்டு!!! அதனை தாண்டி செயல்படுத்துவது என்பது கடினமாகவே அமைந்தது!!!

அரசியலமைப்பு பற்றி, 10 வார இறுதிகளில் எடுத்து முடித்தேன். சற்று கடினமான பாட பகுதியாக அமைந்தது. முடிந்தவரை சிறப்பாக செய்தேன் என்று நினைக்கிறேன். குட்டியப்பன் சாருக்கு நன்றிகள்!!!

தினசரி மருத்துவ அலுவல் தாண்டி, வார இறுதிகளில் ஆசிரியர் பணி என்பது உள களிப்பை அளித்தது என்றால் மிகையாது!!! நாம் கற்ற கல்வியை, மற்றவருக்கு இலவசமாக அளிக்கும் போது, கூடுதல் மகிழ்ச்சியே!!!

தேர்வாளர்கள் கேட்கும் கேள்விகள், என்னை நிறைய படிக்க வைத்தது. புதுபுது தகவல்களை தினமும் தெரிந்து கொண்டேன். எல்லாவற்றிலும் மேலாக, மேடை பேச்சில் உள்ள கூச்சத்தை சற்றே குறைத்துள்ளேன்!!!

இப்பணி வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்பதே விருப்பம்!!! காலங்கள் பதில் சொல்லட்டும்!!

வாழ்த்துகள் தேர்வாளர்களே!!! உங்களை போல், நானும் தேர்வுக்கு நானும் காத்திருக்கிறேன்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment