Tuesday, August 29, 2017

பிக்பாஸ் ஒவியாவும், சமூக உளவியலும்


ஒவியா வெளியேற்றத்திற்கு பிறகு, பிக்பாஸ் மீதான மோகம் குறைந்திருப்பதாக முகநூல் முழுவதும் ஒரே புலம்பல்!!!! நான் பெரும்பாலும் பிக்பாஸ் பார்ப்பதில்லை என்பதால், அதன் உண்மை எந்தளவிற்கு என்று தெரியவில்லை!!! ஆனால் பிக்பாஸில் ஒவியாவின் எதிரணியை சேர்ந்த காய்த்ரி, ஜிலி, சக்தி மற்றும் ஆர்த்தி அனைவரும் வெளியேற்றப்பட்டதால், கலையிழந்தும் காணப்படலாம்!!!

மறுபடியும் ஒவியா நிகழ்ச்சிக்குள் உட்புகுந்தால், இன்னும் நிகழ்ச்சி விறுவிறுப்படையலாம் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்!!! என்னை பொறுத்த வரை, அது தேவையில்லாத செயல் என்றே தோன்றுகிறது!!!

கில்லி, தனி ஒருவன் மற்றும் பட்சா ஆகிய படங்களின் வெற்றிக்கு அந்தந்த படங்களின் ஹீரோவினை விட, வில்லன்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் காரணம் என்பேன்!!! மேற்கண்ட அனைத்திலும்…… ஹீரோவின் பிம்பம், வில்லனின் வீழ்ச்சியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும்.

ஒருவரை ஹீரோவாக சித்தரிப்பதற்கு, அவனுடைய நற்செயல்களை தாண்டி, கெட்ட செயல்களை அழிப்பவனே நல்லவன் என்ற புரிதல், சமூகத்தில் அழமாக பதிந்த உண்மை!!! அதனால் தான், பல படங்களில், ஒரு வில்லனை தாண்டி, இரண்டு மூன்று வில்லன்கள் இருக்கின்றனர்!!!!

இத்தகைய புரிதல் சினிமாவிற்கு மட்டுமல்ல!!! மனித வாழ்க்கை முறையிலும் அப்படியே புரிந்து கொள்ளப்படுகிறது!!! .கா.. காதலுக்கு வரையறை சொல்ல சொன்னால், “ பணத்தை எதிர்ப்பார்க்காத, அழகை எதிர்பார்க்காதஎன்று வரையறை சொல்ல ஆரம்பிப்பமோ தவிர, ” பாசம் கொண்ட, உயிரை விடத் துணிகின்றஎன்று நேர்மறை எண்ணங்களை கொண்டு வரையறை சொல்ல மாட்டோம்!!!

இத்தகைய புரிதல் நிலையிலேஒவியாவின் நற்பண்பு சித்தரிக்கப்பட்டிருக்கிறது!!! ஒவியாவின் எதிரணியை சேர்ந்த காய்த்ரி, சக்தி, ஜிலி மற்றும் ஆர்த்தி போன்றவர்கள் செய்த கெட்ட செயல்களை தட்டி கேட்டதாலோ அல்லது அதற்கு வளைந்து கொடுக்காதாலோ, ஒட்டு மொத்த குடும்பத்தின் புறக்கணிப்பினாலோ, ஒவியாவின் நற்பண்பு பிம்பம் வெளிக்கொணரப்படுகிறது!!!

மேலும், இன்னும் இரண்டு வாரங்களுக்கு, ஒவியா பிக்பாஸ் வீட்டில் இருந்தால், ஒவியாவின் பிம்பம் எளிதாக உடைக்கப்பட்டிருக்கலாம்!!! ஒவியா வீட்டில் உள்ளவர்களிடம் ஒத்துழையாமை உண்டாக்காதது என்பது, நமக்குள் உள்ள ஒவியாவின் பிம்பத்தை உடைத்து இருக்கும்!!! இனிப்பின் சுவை திகட்டுவதற்கு முன்னரே ஒவியாவின் வெளியேறி விட்டதால், ஒவியாவின் மீதான திகட்டுதல் நமக்கு வரவில்லை!!! அவ்வளவு தான்!!!

பிக்பாஸின் விறுவிறுப்பிற்கு, சக உறுப்பினர்களுக்கு இடையே உள்ள சண்டையே முதற்காரணம்!!! ஒவியா மட்டுமே திரும்ப அழைக்கப்பட்டால், அங்கு சண்டை போடுவதற்கு ஆள் இல்லை என்பதால், மறுபடியும் மந்த நிலையே தவிர, வேறொன்றும் நடவாது!!!

சரிமறுபடியும் வில்லிகளை அழைக்கலாம் என்றாலும், வெளியுலக மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்திருப்பார்கள்!!! ஆதலால், சண்டை ஏற்பட வாய்ப்பும் இல்லை!!! சற்று ஆழமாய் சிந்தித்து பார்த்தால், அடுத்தவர்களுக்கு இடையேயான சண்டை, நமக்கு சுவரசியத்தை தருகிறது என்றால், நம்முடைய மன வன்மத்தை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் !!!!

மறுபடியும் சொல்கிறேன்!!! கெட்டவர்கள் இருப்பதால் மட்டுமே, பல பேர் நல்லவராக தெரிகிறார். தோல்வியடைந்தவர்கள் இருப்பதால் தான், வெற்றியாளர் உண்டாகின்றனர்!!! ஒன்றை புரிந்து கொள்வதற்கும் ஒப்பிடுதல் என்பது முக்கிய கருவி!!! ஆனால், அந்த ஒப்பிடல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதிலே முரண் நகை இருக்கிறது!!!

பிக்பாஸ் , ஒவியா போன்றவையெல்லாம், சமூகத்தின் தேவையா என்று ஆரம்பித்து விடாதீர்கள்!!! எவையெல்லாம் முக்கியத்துவம் இல்லையோ, அதனை நோக்கி ஒடுவதே நம்முடைய வழக்கமாகி விட்டதால், இதுவும் தேவையே!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment