கல்லூரி
தேர்வுகளுக்கும் போட்டி தேர்வுகளுக்கும் மிகப்பெரிய
இடைவெளி உண்டு. மெத்த படித்தவர்கள்
கூட, போட்டி தேர்வுகளில் திணற
வாய்ப்புகள் அதிகம். ஆனால், மிதமாக
படித்தவர்கள் கூட, எளிதாக வெல்லலாம்.
கடினமான உழைப்பை விட, சிறப்பான
உழைப்பே போட்டி தேர்வுகளில், வெற்றி
பெற செய்யும். (smart work is better
than hard work)
குறைந்தபட்சமாக
2000-3000 நண்பர்கள் தேர்வு எழுதலாம். ஆனால்
தேர்வில் வெற்றி பெறுவது என்னவோ!!!
100 நபர்கள் மட்டுமே!!!! அதாவது 30 பேரில் ஒருவர் வெற்றி
பெறுவார். வெற்றி சதவீதம் என்பது
மிக அதிகம்!!! ஆனால் மற்ற TNPSC தேர்வுகளில்
வெற்றி சதவீதம் மிக மிக
குறைவு, 6-10 லட்சம் பேர் தேர்வெழுதினாலும்,
தேர்வு செய்யப்படுவது என்னவோ- 1200/1800 நபர்கள் மட்டுமே!!! 600 பேரில்
ஒருவரே வெற்றியடைவது சாத்தியம்!!!
மேற்கண்டதிலிருந்து
தெரிந்து கொண்டால், உங்களது போட்டி களம்
என்பது மிகச் சிறியது. ஆனால்
இதிலும் சில சிக்கல்கள் உண்டு.
1. உங்களது சக போட்டியாளர்கள், உங்களின்
கண் பார்வையிலே இருக்கிறார்கள். ஆதலால், பயம் அதிகமாகும்.
2. ” ஆயுஷ் மருத்துவ துறையில், அரசு வேலை வாய்ப்பை
தவிர வேறு வழியில்லை என்ற
புரிதல்” . இந்த புரிதல் சில
உண்மைகள் இருந்தாலும், இது மட்டுமே உண்மை
என்பது கண்மூடித்தனமான புரிதல் என்பேன். உலகம்
விசாலமானது!!! அதில் பயணிக்க நாம்
மனம் மறுக்கிறது. இந்த இரு தடைகள்
உடைத்தெறிவது அவசியம்!!!!
உங்களை
மனதை குழப்பவதற்கு ஆயிரம் உள்ளங்கள் காத்திருக்கின்றன!!!
அவர்களின் எண்ணங்களுக்கு, உங்களை பலிகடா ஆக்கப்பட
வேண்டும்.
குறைந்தபட்சமாக
6 மணி நேரமாவது தூங்குங்கள். விடியற்காலை எழுந்து படித்தால் நன்று
என்பதெல்லாம் மாயை!!! உங்களின் சவுகரியத்தை
பொறுத்து நேரத்தை முடிவு செய்யுங்கள்!!!
விடியற்காலை 3 ,மணி இருந்தாலும் சரி!!!
நள்ளிரவு 1 மணியாக இருந்தாலும் சரி!!!!
குறைந்தபட்சமாக
6-10 மணி நேரமாவது படித்திட வேண்டும். அதிலும் இரு நூல்களுக்கு
மேல் தேர்வு செய்யாதீர்கள்!!! அதற்காக
ஒரு நூலை மட்டுமே படித்து
கொண்டிருக்காதீர்கள்!!! சற்று கடினமான ஒன்று,
எளிதான ஒன்றையும் சேர்த்து படியுங்கள்!!! அதாவது நோய் நாடலையும்,
மகளிர் மருத்துவத்தையும் சேர்ந்து படிக்கலாம். ஆனால், நோயில்லா நெறியையும்,
தாதுவையும் சேர்த்து படித்தால் தலைவலி வந்து விடும்!!!
முடிந்தளவிற்கு
முகநூல், கட்செவி, தொ(ல்)லைபேசி
மற்றும் டிவியை
அணைந்திடுகள்!!!!
தேவைப்பட்டால், பிடித்த பாடல்களையோ, பிடித்த
காமெடி நிகழ்ச்சியையோ பாருங்கள் தவறில்லை!!!! அதற்காக படமும், கிரிக்கெட்டும்
பார்த்து கொண்டிருக்காதீர்கள்!!!
அடுத்ததாக
முக்கியமான கேள்வி, பயிற்சி மையங்களில்
சேர்ந்து படிப்பது பற்றி????? பயிற்சி மையங்களில் பணிகளை
முதலில் பார்ப்போம்!!! என்னை பொறுத்தவரை இரண்டு
முக்கியமான பணிகளை மேற்கொள்கிறது. 1. பாடங்களை
புரிய வைத்தல் 2. மாதிரி தேர்வுகளை வைத்தல்
இவற்றில்
பாடங்களை புரிய வைத்தல் என்பது
சித்த மருத்துவ தேர்விற்கு தேவையில்லாத ஒன்று. மாதிரி தேர்வுகளின்
பயனை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று
நேர மேலாண்மை; மற்றொன்று- என்ன மாதிரியான கேள்விகள்
கேட்க வாய்ப்புண்டு என்ற புரிதல்…
தேர்வு
நேரம் 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதால்,
நேர மேலாண்மை மிக முக்கியமாகிறது. அதற்கு
பயிற்சி தேவை. மேற்கண்ட நன்மையை
தாண்டி, அதிகப்படியான தேர்வுகள் எழுதும் போது அதிகமான
நேரமும் வீணாடிக்கப்படுகிறது. அதாவது மாதிரி தேர்விற்கு
2.30 மணி நேரமும், அதற்கான வினா-விடை
குறித்த உரையாடல் என 4-5 மணி நேரம்
விராயமாகிறது. தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி
மையத்தின் மையத்தின் தேவை குறித்து, மேற்கண்ட
சாதக பாதகங்களிலிருந்து நீங்களே முடிவு செய்யுங்கள்!!!
நானும்
என்னுடைய தோழர்களும், இதுகாறும் பயிற்சி மையத்தில் காலடி
வைக்காமலே வெற்றி பெற்றிருக்கிறோம்!! இந்த
தேர்வு மட்டுமல்ல….
TNPSC மற்ற
தேர்வுகள் கூட!!! 2013 மற்றும் 2015 ஆகிய இரு ஆண்டுகளிலும்,
முதலிடம் பெற்றவர்கள் பயிற்சி மையத்தை தேடாதவர்கள்
என்பது கொசுறு தகவல்!!!!
அடுத்தது
பயிற்சி கையேடு- தேர்விற்கு பயிற்சி
கையேடுகள் அவசியம் என்று நிச்சயமாக
சொல்ல முடியாது. நம்முடைய பாட புத்தகங்களே தேர்விற்கான
பாடமாக உள்ளதால், கையேடுகளின் அவசியம் குறைவு!!! கிடைக்கும்
பட்சத்தில், அதனை சேர்த்து படித்தாலும்
தவறில்லை. ஆனால், புத்தகத்தை தாண்டி
வினா வந்து விடப்போகிறதா என்ன???
தேர்ச்சி
பெற்றவர்களிடம் உள்ள குறிப்புகள்---- இதனை
வாங்கி படித்தாலே எளிதாக வெற்றி பெறலாம்
என்று புரிதல், நிச்சயமாக தவறு என்பேன்!!! ஒவ்வொருவருக்கும்
படிக்கும் முறை என்பது வேறுபாடானது!!!
எனக்கு முக்கியமாக தெரிகின்ற குறிப்புகள், மற்றவருக்கு முக்கியமற்றதாக தெரியலாம்!!! மேலும் குறிப்புகள் மட்டும்
படிக்கும் போது, கேள்விகள் கேட்கும்
தன்மை சுருக்கப்படுகிறது. தேர்விற்கு புத்தகத்தை படிப்பதே சால பொருத்தம்!!!
அப்பறம்
என்ன!!! படிக்க ஆரம்பித்து விட்டீர்களா???
(தொடரும்)
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:
Post a Comment