ஒவியா
குறித்து புரிதல்கள் அதீதமாகவே தெரிகின்றது. பிக்பாஸில் ஒவியா போன்ற குணமுள்ள
மனிதர்களை ஆதரிக்கும் மனம், நிகழ் காலத்தில்
ஒவியா போன்ற குணமுள்ள மனிதர்களை
வெறுப்பதாகவே இருக்கும்.
நாமெல்லாம்,
பிக்பாஸ் நிகழ்ச்சியை மூன்றாவது நிலையில் இருந்து பார்க்கிறோம். அதில்
நேரடியாக கலந்து கொள்வதில்லை. அதே
சமயத்தில், நாமெல்லாம் கலந்து கொண்டிருப்போமானால், நமக்குள்
இருக்கும் காய்த்ரியும், நமிதாவும், சினேகனும் சக்தியும் ஜீலியும் வெளிப்படுவார்கள் என்பது கண் கண்ட
உண்மை...
மேற்கண்டவை
அனைத்தும் , நம்மை நேரடியாக பாதிப்பை
ஏற்படுத்தாதவை. ஆதலால், ஒவியாவிற்கு ஆதரவு
அளிக்கிறோம். சூழ்நிலை தான், மனிதனின் உண்மை
குணத்தை வெளிப்படுத்தும். தர்ம சங்கடமான சூழ்நிலை
வராத வரை, நாமெல்லாம் நல்லவனாகவே
நடித்து கொண்டிருப்போம்!!! ஒவியாக்கள் நல்லவரென்றும் காயத்ரிக்கள் கெட்டவரென்றும் புரிந்து கொண்டிருப்போம்!!!!
உங்களில்
ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை
குமார்
No comments:
Post a Comment