”
ஆண்களினை எளிதாக புரிந்து கொள்ளலாம். பெண்களை புரிந்து கொள்ள இயலாது??? ” என்பது போன்ற
புரிதல்கள்!!! அவ்வப்போது வருவது வழக்கம்!!! அதில் இதுவும் ஒன்று!!!
ஆண்
பெண் உடலமைப்பில் இனப்பெருக்க மண்டலத்தை தவிர, அனைத்துமே ஒன்று தான்!!!! இடுப்பு எலும்பில்
சிறிய மாற்றம், உடல் தசையில் சிறிய மாற்றம் போன்ற சிற்சில மாற்றங்களே உள்ளது.
இதனை
தாண்டி....... ஆணையும் பெண்ணையும் வேறுப்படுத்துவது ஹார்மோன் மற்றும் X Y குரோமோசோம்கள்
மட்டுமே!!! மேலும் சுற்றுபுற சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் ஜீன்கள் தான்!!!!
genetic adaptation எனலாம்!!!
ஆணும்,
பெண்ணும் ஒரே மாதிரியான சிந்திக்க தெரிந்தவர்கள் தான்!!! ஆனால் வாழ்க்கை முறை, ஆண்
மற்றும் பெண்ணிற்கான வேலைகள், பொறுப்புகள், பெறப்பட்ட கல்வி மற்றும் அனுபவங்கள் அடிப்படையில்
ஆணுக்கும் பெண்ணும் சிந்தனை முறையில் பல வேறுபாடுகள் கால போக்கில் மாறி விட்டன!!!!
ஆணினை
உலகத்தை பெண் புரிந்து கொள்வது எவ்வளவு கடினமோ, அந்தளவிற்கு பெண்ணை உலகத்தை ஆண் புரிந்து
கொள்வது கடினம்!!! இதை விடுத்து பெண்ணை புரிந்து கொள்ளவே ,முடியாது என்பதெல்லாம் வெற்று
பிதற்றல் என்பேன்!!!!
” பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாது
“ என்ற உங்கள் வாதத்தை வைத்து கொண்டால், ஆணை மட்டும் புரிந்து புரிந்து கொள்ள இயலுமா???
அவனையும் புரிந்து கொள்வது கடினமே!!!
நாம்
பெரும்பாலும் ஆணின் உலகத்தில் இருந்து, இவற்றையெல்லாம் பேசி கொண்டிருக்கிறோம்!!! அதை
விடுத்து வெளி வந்து ஆண் மற்றும் பெண்ணின் சார்பு நிலையற்ற பொது மனநிலையில் யோசித்தால்,
இரண்டுமே ஒன்று தான்!!!!!
எப்படி
இருந்தாலும், எக்காலத்திலும் ஆண் மற்றும் பெண்ணின் மனநிலையை முழுவதும் புரிந்து கொள்ள
இயலாது??? முயற்சிக்கலாம்!!!
முடிந்தால்....
ஜான் கிரே எழுதிய, ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் என்ற
நூலை வாசித்து பாருங்கள்!! சிறிது தெளிய/தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு..
பெண்ணை
மட்டுமல்ல!!! ஆணையும் தான்!!!!
உங்களில்
ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை
குமார்
No comments:
Post a Comment