” மூட்டு வலி குறைந்திருக்கம்மா???
“ என்றேன்.
“
ஆயில் தேய்ச்சா வலி குறையுது ப்பா… வேலை செய்ய ஆரம்பிச்சா…
உடனே வலி ஆரம்பிச்சுடுது
ப்பா “ என்றார் அந்த பாட்டி.
”
நான் தான் வேலையை செய்ய கூடாதுன்னு சொல்லியிருக்கேன்னால பாட்டி … “
“
வேலை செய்யாம இருந்தா, சாப்பாடு யாரு போடுவா ப்பா!!!! "
“
உங்க புள்ளைங்க தான் “
“
ஒருத்தன் மெட்ராஸ் செட்டில் ஆகிட்டான். இன்னொருத்தன் ஊருற இருந்தாலும், வேற இடத்துல
வீடு கட்டிகிட்டு போயிட்டான். வந்து பார்க்கிறது இல்ல”
”………………..”
“
ஏதோ ரேசன் கடை அரிசி குடுக்கிறாங்க… இரண்டு ஆட்டு மாட்ட வைச்சுக்கிட்டு காலத்த
ஒட்டுகிட்டு இருக்கேன்…… “
-------------------------------------------------------------------------------------
மேற்கண்ட நிகழ்வுகள்
எனக்கு புதிதல்ல……
முதுநிலை பட்ட படிப்பு காலத்திலிருந்து, இன்றைய அரசு மருத்துவராக இருக்கும் வரை தொடர்கிறது;
(இன்னும் அதிகமாகலாமே தவிர, குறைய வாய்ப்பில்லை)
பெரும்பாலான பெற்றோர்கள்,
கண்ணீர் ததும்பவே சொல்லி் வருத்தப்பட்டு சொல்வதுண்டு. ஆனால், மேற்கண்ட பாட்டி…. கண்ணில் சிறிதும்
துளியுமில்லை; முகத்தில் வருத்த ரேகையும் இல்லை. ஏதே ஒரு வைராக்கியத்தோடு கடந்து சென்றதாகவே
உணர்கிறேன். தன்னுடைய முதுமை காலத்தையும், தன்னுடைய சுய உழைப்பிலே கடக்க வேண்டும் என்ற
வைராக்கியம்!!!!
------------------------------------------------------------------------------------
மேலை நாடுகளிலிருந்து
வருபவர்கள், இந்தியாவின் குடும்ப அமைப்பை கண்டு வியப்பதுண்டு. ஆனால், அந்த குடும்ப
கட்டமைப்பு மிக இலகுவான சிதைய தொடங்கி யிருக்கிறது. வருத்தமான நிகழ்வு!!!! சில சமூக
மாற்றங்கள் மெதுவாக நடக்கும். இத்தகைய புறக்கணிப்பு என்பது சற்று வேகமாக நடைபெறுவதாகவே
உணர்கிறேன்.
வெளிநாடாக இருப்பின்… காப்பீட்டு திட்டங்களும்,
பென்சன் பிளான்களும், இத்தகைய சுமையை எளிதாக கடக்க உதவுகின்றன. இந்த நாட்டு மக்கள்,
மகனின்/மகளின் மீது நம்பிக்கை வைத்தார்கள்!!!! அன்பின் மீதும் கடமையின் மீதும் நம்பிக்கை
வைத்தார்கள்!!!!
இன்றைய சூழ்நிலையில்,
இந்தியா இளமையான நாடு. அதாவது மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது, முதியோர்கள் எண்ணிக்கை
குறைவாக உள்ள நாடு. ஜப்பான, சீனா போன்ற நாடுகள் முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
அதிலும் ஜப்பானில் பெருமளவு நிதியை முதியோருக்காக ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது.
இன்னும் பத்து-
இருபது ஆண்டுகளில், இந்தியாவும் அந்நிலையை எட்டலாம். பிறப்பு விகிதம் கட்டுக்குள் இருப்பதால்,
அந்நிலையை எளிதாக எட்ட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனையாலே, சீனா அரசு ஒரு குழந்தை திட்டத்தை
கைவிட்டது.
இந்தியாவின் நிதி
நிலைமையில், முதியோர்களுக்கு அதிக நிதி ஒதுக்க வாய்ப்பில்லை. இருந்த போதிலும்….. தமிழக அரசு சில
நலதிட்டங்களை அளித்து வருவதையும், இத்தருணத்தில் நினைவு கொள்ள வேண்டியுள்ளது.
எதற்கெடுத்தாலும்
சீனாவோடு இந்தியாவை ஒப்பிட்டு கொள்ளும் நம்மவர்கள், பெற்றோர் பாதுகாத்தல் முறையை மட்டும்
மறந்து விட்டார்கள் போலும்!
யாரையும் தனிப்பட்டு
குற்ற சொல்ல விருப்பமில்லை; பல்வேறு காரணங்களை பட்டியலிடுவதால் எதுவும் நடக்க போதுவதில்லை.
உடல் உபாதைகள்,
உளவியல் பிரச்சனைகள் மற்றும் நிதி நெருக்கடி என பெற்றோர்கள் மீது ஏறியப்படும் கத்திகள்
ஏராளம்.
சிலர் வீட்டிலே
அனாதைகளாக…
சிலர் வீடு இருந்து அனாதைகளாக… சிலர் கையேந்தும் பிச்சை காரர்களாக….. வடிவங்கள் மாறுபடுதுகிறதே
தவிர, பெற்றோருக்கான பிரச்சனைகள் மாறுவதில்லை!!!
இதை உங்கள் பிள்ளைகள்
கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள்!!! நாம் அனைவரும் ஆயிரம் வருடங்கள் வாழ போவதில்லை… இன்னும் 30 வருடங்கள்
கடந்தாலும், நாமும் புறக்கணிக்கப்பட்ட பெற்றோர் என்பதை மறவாதீர்கள்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment