சில தினங்களுக்கு முன்...
பேருந்தில் பயணித்த போது... மனதில் தோன்றிய அவதானிப்புகள்..
1. வாழ்வியலின் முக்கியமான நிகழ்வுகளை பதிவு செய்யும் ஆர்வம் மனிதனுக்கு உண்டு. திருமண நிகழ்வுகளை பதிவு செய்வதற்கு, ஸ்டியோக்களும் அதிகமாகி விட்டது. அதிலும்
pre-wedding, post-wedding, candid wedding photoshot என்று புதிய வசதிகள் அதிகமாகி வருகிறது. ஆனால் முக்கிய நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் புகைப்பட நிபுணர்களுக்கு, தற்கால வசதியாக மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
இன்றும் பல பேர்களிடம் கேமராக்கள் இருக்கிறது. மேலும் செல்போன்களும் இன்னொரு கேமராவாக மாறி வருகிறது. ஒவ்வொரு திருமண நிகழ்விலும்... ஒரு புகைப்பட நிபுணரை தாண்டி... பல செல்போன்களும் படம் பிடிக்கும். இவ்வாறாக மறைமுக அழுத்தம் புகைப்பட நிபுணரின் மீது விழுகிறது. (நானும் நண்பர்களின் திருமண நிகழ்வுகளை பதிவு செய்து உள்ளேன்.).
எந்த தொழிலாக இருந்தாலும், அதே பணியை இன்னொருவரும் செய்யும் போது.... மறைமுக அழுத்தம் வரத்தானே செய்யும். இது நவீனத்தின் எச்சம்!!! இதை தவிர்க்க முடியாது; ஆனாலும் அதனை விடுத்து சிறப்பாக புகைப்படம் எடுத்து தொழிலில் முன்னேறுவது அவரவர் திறமையை பொறுத்து!!!
2. பொது சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்கு..... பொது இடங்களில் கழிவறை சுகாதாரம் முக்கியமென்று நினைக்கிறேன். அதிலும் மக்கள் அதிகமாக கூட கூடிய இடங்களில் பேருந்து நிலையம், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் பொது கழிவறைகளின் ஏற்படுத்தினால் மட்டுமே...... தூய்மை இந்தியா இயக்கம் வெற்றி பெறும். பேருந்து நிலையங்களில் பொது கழிவறைகள் இருக்கவே செய்கின்றன். ஆனால் சுகாதாரமாக இருக்கின்றவா?? அப்படியே இருந்தாலும் ஒப்பந்தகாரர்கள் கேட்கும் பணம் அதிகமாகவே இருக்கிறது.
அரசே முழுவதும் இலவச கழிவறை அமைத்து, தூய்மையாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் ஒப்பந்த காரர்களிடம் வழங்கும் போது.... குறைந்தபட்ச பணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
3. தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு... பேருந்துகள் சிறப்பாகவே இருக்கின்றன. ஆனால்... கடந்த சில ஆண்டுகளாக..... பொது போக்குவரத்தினை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து விவரங்களை, போக்குவரத்து துறை கணிணி மயமாக்கி, இணையத்தில் பதிவேற்றினால் ,.... அதனை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு உள்ளது.
4. புதுகோட்டையின் பெரும்பகுதிகள், வறட்சியாக உள்ளது. தண்ணீர் பஞ்சம் இருப்பதாக தெரிகிறது. நிறைய இடங்களில் நீரேற்று மோட்டர்கள் அதிகமாக காணப்பட்டது. நான் பேருந்தில் பயணிக்கும் போது... வீட்டிற்கு தேவையான நீரினையும்... கடையிற்கு தேவையான நீரினையும் வேறு இடங்களிலிருந்து எடுத்து வந்ததையும் பார்க்க முடிந்தது.
வறட்சியாக உள்ளதால், விவசாயம் பெரிதாக இல்லை. ஆதலால் மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் போது எளிதாக இருந்ததாக தெரிகிறது. வளைவுகள் அதிகமாக இருக்கும் போது... .அதனை நேராக மாற்றுவதற்கு பெரிய எதிர்ப்புகள் இருக்க வாய்பில்லை என்று தோன்றுகிறது. ஆனால் திருவாரூர் – கும்பகோணம் சாலையில் மிக பெரிய வளைவுகள் இருந்தும் விவசாயம் சிறப்பாக இருப்பதால் மாற்றுவதற்கு வாய்ப்பில்லாமல் போனது.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment