Saturday, April 18, 2020

கோரோனா - தூய்மை பாதுகாவலவர்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு... சில துறைகளின் மீது அதீத அன்பினை கொட்ட தொடங்கியுள்ளனர் மக்கள் !!!! அதிலும் முக்கியமாக மருத்துவ துறை , துப்பரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறை!!!

ஒரு பிரச்சனை ஏற்படும் போது...... அந்த பிரச்சனை தீர்வு காணும் மனிதர்களின் மீதான இயல்பான அக்கறை / பாசம் இயற்கையே!!! ( ஆனால்... அதே பிரச்சனை மருத்துவ துறையினால் வரும் போது.... அத்துறையினரையும் எதிர்க்கவும் தயங்க மாட்டார்கள் என்பது உண்மை...கா கோரோனாவில் இறந்த மருத்துவரை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வு ).

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல!!! பயத்தின் இரு விளம்புகள்!!! ஒரு புறம் அதீத பாசத்தை கொட்டிகிறது... நமக்கே பாதிப்பு என்றால் புறக்கணிக்கவும் செய்கிறது.

(கடன் வாங்கும் போது... அன்பாக பேசுவது இயல்பு!!! அதே கடனை திரும்பி கேட்கும் போது அன்பு வெறுப்பாக விளம்பி நிற்கும்.!!! )

----------------------------
சரி... விடுங்க!!!

இதையெல்லாம் .... காலத்திற்கு ஏற்ற... உணர்ச்சி குவியல்கள்!!! பண மாலை போடுவது !! பாத அபிஷேகம் செய்வது !!! பாராட்டி முகநூலில் போஸ்ட் போடுவது!!! என அனைத்தும் அமர்க்களங்களும் நடக்கும்!!!

இதற்கு முன்னரும்... இதே பணியை தான் செய்தார்கள்!!!! இப்போதும் செய்கிறார்கள்!!! நாளைக்கு செய்வார்கள்!!! தூய்மை பணியாளர்களின் சம்பளம், வேலை உறுதி தன்மை, வாழ்க்கை திறன் மேம்பாடு பற்றி எப்போதாவது யோசித்து இருப்போமா??? நிச்சயம் கிடையாது... இப்போதும் யோசிக்க மாட்டோம் என்பதே உண்மை!!

இன்றைய சூழ்நிலைக்காக... சிலவற்றை செய்து... .உலகத்திற்கு நல்லவனாக காண்பித்து.... காலத்தை கடந்து விடுவோம்!!!

------------------------------

சரி... கொரோனா வைரஸ் சரியாகி விட்டது என்று வைத்து கொள்வோம்!!!

கோரோனா நேரத்தில் பணியாற்றுவர்களுக்கு மரியாதை செலுத்துவோமா??? என்ன??

டாக்டருக்கு சம்பளம் பத்தலையா???” “ குப்பையை குப்பைத்தொட்டியில் கூட போடாமல் தெருவில் போடுவது....... ” என்பது போன்ற நன்னெறி செயல்களும் / வார்த்தைகளும் நடக்க தான் செய்யும்!!!

தொழில் சார்ந்து.... பணி சார்ந்து.... யாரையும் ஏளனம் செய்யாதீர்கள்!!! உடல் உழைப்பினையும் மன உழைப்பினையும் சமமாக பாவியுங்கள்!!!! ஒவ்வொருக்கும் பணி சார்ந்து பல பிரச்சனைகள் இருக்கும்... அதையும் புரிந்து கொள்ளுங்கள்!!!

உழைப்பிற்காக மரியாதை என்றும் மறவாதீர்கள்!!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

 


No comments:

Post a Comment