Monday, April 6, 2020

கொரோனா - கிராம சுயசார்பு வாழ்க்கை

நவம்பர் 2018 கஜா புயல் கடந்த பிறகு.... முதல் மூன்று நாட்கள் மிகவும் கொடுமையாக கடந்தது. பலருக்கு உணவில்லை!!! உடுத்த உடையில்லை!!! போக்குவரத்து தடைப்பட்டு... அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் மிகப்பெரிய பிரச்சனையிருந்தது!!! மின்சாரம் வர... ஒரு மாதம் ஆனது!! வீடுகள் சீரமைத்து முழுமையாக தயாராக மூன்று மாதங்கள் ஆனது.

அந்த நிலையினை ஒப்பிடும் போது... இன்றைய ஊரடங்கில் மிகப்பெரிய பிரச்சனை இல்லை!!! அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறது!! மின்சாரம் கிடைக்கிறது!!! எல்லா அடிப்படை வசதிகளும் இருக்கிறது!!! ஆனால் வீட்டினை மட்டும் வெளியேற தடை!!!! அது மட்டும் வித்தியாசம்!!!

இது மாதிரியான நெருக்கடி சூழ்நிலைகளில்... சுயசார்பு பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. முன்பெல்லாம் சுய சார்போடு இருந்தோம்!! ஆனால் உலகமயமாக்கலுக்கு பிறகு சுயத்தை இழந்து.. பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு வணிகயுலகம் தள்ளி விட்டது!!! சுயசார்போடு வாழ்ந்தால்... இதுமாதிரியான நெருக்கடி நிலை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை!!!

இப்போது உலகமயமாக்கலை பல நாடுகள் எதிர்க்க ஆரம்பித்து விட்டது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாவதால்... ஒவ்வொரு நாடும் இறக்குமதியை குறைக்கவே எண்ணுகின்றன்!!! மறுபுறம் தேசியவாதம்/சுதேச இயக்கமும் வளர்ந்து வருவதால்..... ஒவ்வொரு நாடும் சுயமாக உற்பத்தி செய்யவே விரும்புகின்றன!! இது நீட்சியே இந்தியாவின்இந்தியாவில் தயாரிப்போம்திட்டம்!!

இந்த புரிதல்.... ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வர வேண்டும். சிலரிடம் தோற்ற ஆரம்பித்து விட்டது!! கிராமங்களில் சுயசார்பு அதிகமாக இருக்கும் என்பது பொது புத்தி!!! ஆனால் கிராமங்களும் சுய சார்பினை இழக்க ஆரம்பித்து விட்டது என்பதே உண்மை!!!

எனது வீட்டில் கூட மாட்டினை விற்று, 20 ஆண்டுகளாகி விட்டது!! கடந்த கஜாவினால் தேங்காய், புளியமரம் போன்றவைகளும் பாதிக்கப்பட்டு விட்டது!!! கஜாவிலிருந்து மீண்ட வாழைமரத்திலிருந்து வாழைப்பழங்கள், சர்க்கரை வள்ளிகிழங்கு, உறவினர் வீட்டில் தந்த நிலக்கடலை என ஊரடங்கின் போது நொறுக்கி தீனியாக இருந்தது!!! கத்திரிகாய் ,முருங்கை காய், மாங்காய், முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி கீரை, புதினா என சில சமையல் பொருட்கள் வீட்டினை சுற்றியே இருந்தது!!!

கஜா பாதிப்பு இல்லையென்றால் .....இளநீர் வெட்டி சாப்பிட்டு இருக்கலாம்!! அறுவடை சற்று தாமாதம் ஆகியதால்..... வெள்ளரிகாய், தர்பூசணி கூட விதைக்கப்படவில்லை.... ஏப்ரல் கடைசியில் தான் முந்திரி பழம் கூட கிடைக்கும்!!!

நகரத்தில் குறுகிய அறைக்குள் அடைந்து கிடைப்பதை விட... கிராமத்தில் காற்றோட்டமாக இருப்பது சிறப்பு!!! விருப்பப்பட்ட பொருட்களை எல்லாம் நகரத்தில் பெறலாம். ஆனால் கிராமத்தில் பெற முடியாது. அவசர காலங்களில் வாழ்க்கையை எளிதாக கடக்க முடியும். கோயம்பேடு மற்றும் டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியதன் பின்புலம் இது தான்!!!

இதெல்லாம் தற்பெருமைக்காக அல்ல!!! சுயசார்பின் தேவையை புரிய வைப்பதற்காக!!! சுயத்தை இழக்காமல் வாழ முயல்வோம்!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

 


No comments:

Post a Comment