கலாச்சார,
மத மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில்
விருப்பம் இருப்பினும், அதில் கலந்து கொள்வதில்
விருப்பம் இருந்ததில்லை;மாறாக, தவிர்க்கவே விரும்புவேன்.
இருந்த போதிலும், அப்படியான தருணங்கள், பல அமைந்து விடுவதுண்டு!!!
இதில் முக்கியமானது, சாமி தரிசனமாகவே இருக்கும்.
இப்படியாக
கலந்து கொண்டு விட்டிற்கு வரும்
போது, “ கோவிலுக்கு போனியே.... என்ன வாங்கிட்டு வந்த????”
என்பார் அம்மா.
“ கோவிலுக்கு
போனா!?!?!? ... எதாதுவுது வாங்கிட்டு வரணும் ரூல்சு எதுவும்
இருக்கிறதா “ என்று எதிர் கேள்வி
கேட்பேன்.
“ வாங்கிட்டு
வரணும் ன்னு ரூல்ஸ் கிடையாது.
எதாவது சாமான் வாங்கிட்டு வந்தா,
ஐந்து வருசமானாலும், அந்த கோவில் வாங்கினதும்
ஞாபகம் வருமல்ல....” என்பார்...
அடுத்த
சொன்ன விஷயம், இன்னும் ஆச்சரியமாகவும்/உண்மையாகவும் இருந்தது.
“ நம்ம
பொருள் வாங்குவாங்க ன்னு நிறையே பேர்
கடை போட்டிருங்காங்க!!! அந்த கடைக்கு வியாபாரம்
நடந்த மாதிரி இருக்கும்.... அவங்களுக்கு
லாபம் கிடைச்ச மாதிரி இருக்கும்
....” என்றார்...
(மேற்கண்ட
உரையாடல் என்பது, இரண்டு மூன்று
தடவை நடந்தும், கோவிலுக்கு சென்றால், எதாவது வாங்க வேண்டும்
என்ற எண்ணம் வந்ததில்லை...).
சரி.....
நாம் விஷயத்திற்கு வருவோம்....
எந்தவொரு
பண்பாட்டு, மத மற்றும் கலாச்சார
நிகழ்விலும், அதை சுற்றிய இணை
பொருளாதாரம் (pararllel
economy ) என்பது சுழன்று கொண்டிருக்கும். பல
வேலைவாய்ப்புகளை தற்காலிகமாக உருவாக்கும். தீபாவளி, பொங்கல் தருணங்களில் .... திடீரென்று
முளைக்கும் ரோட்டர கடைகளினை போல,
பல பேருக்கு வேலைவாய்ப்பினையும் அளித்து, சிறிதளவு லாபத்தை அளிக்கும்.
பொருளாதார
மேம்பாட்டோடு, உறவுகளின் கூடுகை, மன நிறைவு
மற்றும் பண்பாட்டு இருப்பு போன்றவை நிலைநிறுத்தப்படுகிறது.
அதே சமயத்தில்.... இத்தகைய நிகழ்வுகளை முதலாளித்துவ
உலகம் செயற்கையாக ஏற்படுத்த முயலுமானால், எந்த பலனையும் பெற
இயலாது. அதற்கு சம கால
உதாரணம் ஜக்கி வாசு தேவ்வின்
சிவ ராத்திரி!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment