Monday, March 5, 2018

வாழ்வியலும், முதலாளித்துவ பொருளாதார ஆட்கொள்ளலும்


” காதலர்கள் தோற்கலாம்; ஆனால் காதல் தோற்காது “ என்ற சொற்றொடரை அதிகமாக கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இது உண்மையா பொய்யா என்ற விவாதத்திற்கு செல்ல வேண்டாம். ஆனால் காதல் என்பதன் புரிதல் மட்டும், காலத்திற்கு ஏற்ப மாற கூடியது. இன்றைய நிலையில் காதலின் புனித தன்மை கூட குறைந்து, விஜய் டிவி சொல்வது போல் Smart love என்றளவிற்கு வந்து விட்டது.

காதல் மட்டுமல்ல. உலகின் அனைத்தும் செயல்களும் மாற்றத்திற்கு உட்பட்டதே; சில செயல்கள் தூக்கி பிடிக்கப்படலாம்; சில செயல்கள் முற்றிலும் தூக்கி யெறிய படலாம். 20 ஆண்டுகளுக்கு முன் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ரேடியாவினை, இன்றைய தொலைகாட்சியும், தொலைபேசியும் ஆட்கொண்டு விட்டது. இது சரியா? தவறா? என்ற விவாதமெல்லாம் பிற்போக்கானது; நிற்க!!!!

நிலவுடமை சார்ந்த சமூக வாழ்வியல், ,மெல்லியதாக பொதுவுடைமை சமூகத்தினை நோக்கி நகர வைத்தது. இவ்வாறாக பொதுவுடைமை சிந்தாந்தம், 20 நூற்றாண்டில் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது என்றால் மிகையாகாது. “ பழக பழக பாலும் புளிக்கும் “ என்ற பழமொழியை மெய்யாக்கும் விதமாக, இன்றைய சூழ்நிலையில் கம்யூனிசமும் வீழ்ச்சி அடைய தொடங்கி விட்டது; அதற்கு எதிர்மாறான முதலாளித்துவ பொருளாதாரம் எழுச்சி பெறுகிறது. இது மோசமான சமூக/வாழ்வியல் மாற்றம் என்றாலும், தடுக்க இயலாது.

இன்றைய 90 சதவீத பொது மக்கள், தெரிந்தோ தெரியாமலோ முதலாளித்துவ சிந்தாத்ததிற்கு ஆட்கொண்டு விட்டனர். இதில் மக்களாட்சி, சமூக நீதி, மதசார்பின்மை என்பதெல்லாம் எளிதாக அடிபட்டு விடும்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment