சென்னை
மற்றும் ராஜஸ்தான் அணி , சூதாட்ட புகாரில்
ஈடுப்பட்டார்கள் என்று பிசிசிஐ சொன்னது.....
சரி.... அவங்க சொன்னா கரெக்ட்
தான் இருக்கும்ன்னு ஒத்துகிட்டேன்.
சரி....என்ன டா தண்டனை
கொடுக்க போறீங்கன்னா.... ஆயுள் தண்டனையா? அல்லது
அபாரமா? ன்னு பார்த்தா.... இரண்டாண்டுகள்
அணிகளுக்கு தடைன்னு சொன்னிங்க!!!!!.... சரி..
.நீங்க சொன்ன கரெக்ட் தான்
இருக்கும்ன்னு ஒத்துகிட்டேன்.
இந்த இரண்டு அணி வீரர்கள்
எந்த தவற்றை செய்யலையா??? ரொம்ப
நல்லவங்களாம்!!! சரி... அதனை ஒத்து
கொண்டேன்!!!!
ரொம்ப நல்லவர்களான இரண்டு அணி வீரர்கள்
விளையாடுவதற்கு, புனே மற்றும் குஜராத்
என்று புதிய அணிகள் உருவாக்கப்பட்டது(திறமையை வீணாடிக்க கூடாது
பாருங்க!!!!). இவங்களெல்லாம் கிரிக்கெட் விளையாட வில்லையென்றால், இந்திய
விளையாட்டு துறைக்கு, மிகப்பெரிய இழப்பு அல்லவா? ... நீங்க
சொன்னா கரெக்ட் தான் இருக்கும்ன்னு
ஒத்துகிட்டேன்.
இரண்டு
ஆண்டுகள் முடிந்து விட்டன். புனே மற்றும் குஜராத்
அணிகள் நீக்கப்பட்டது. சென்னை மற்றும் ராஜஸ்தான்
அணிகள் இணைக்கப்பட்டது. சென்னை அணிக்கு விசில்
அடிங்கன்னு!!! நாங்களும் தோனி,ரெய்னான்னு பார்க்க
கிளம்பிட்டோம்!!! ஏதோ... நிங்க சொன்னா
கரெக்ட் தான் இருக்கும்ன்னு நம்பிக்கை
தான்!!!
என்னா!!!
நாங்கெல்லாம் அதி புத்திசாலிகள்!! திராவிட
இனத்தவர்!!! மற தமிழர்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment