Saturday, March 31, 2018

வருங்காலங்களில் வேலைவாய்ப்பின் தன்மை


இரு வாரங்களுக்கு முன்,” வருங்காலங்களில், வேலைவாய்ப்பு நிலை என்னவாக இருக்கும் சார்??? “ என்றார் நண்பர் ஒருவர். அதற்கு என்னுடைய நேரடியான பதில், “ இன்றைய நிலையை விட, இன்னும் மோசமாக மாறுமே தவிர குறைய வாய்ப்பில்லை. வேலைவாய்ப்பு கிடைக்கிற தன்மை குறையவே செய்யும்என்றேன். அந்த பதில், அவருக்கு வியப்பாக இருந்தது; வருத்தத்தினை வெளிப்படுத்தினார்.

இந்திய மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைபெறும் சமூக மாற்றத்தினையும், பொருளாதார மந்தநிலை புரிந்து கொள்பவர்களுக்கும், உலக அளவில் மாறி வரும் பொருளாதார வலது சாரி சிந்தனையை புரிந்து கொள்பவர்களுக்கும், இந்நிலையில் ஆச்சரியம் இருக்க வாய்ப்பில்லை;

அதிலும் இந்தியாவில், நேரடியாக விவசாய துறையிலிருந்து, சேவை துறையினை நோக்கி பயணிக்கும் சமூக மனநிலையை புரிந்து கொள்ளும் போது, TNPSC Group- IV தேர்வில், 8,000 பணியிடங்களுக்கு, 22 லெட்சம் பேர் விண்ணப்பதில் ஆச்சரியம் இல்லை!!!

அதனை மேலும் உண்மையாக்கும் விதமாக, மேலுமொரு வருத்தமான செய்தியும் வந்துள்ளது. ரயில்வே துறையில் உள்ள 90,000 பணியிடங்களுக்கு, சுமார் 2.5 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இது வருத்தமான நிலையாக இருந்தாலும், உண்மையை வெளிக்கொணரும் கசப்பு டானிக்!!!!

மேற்கண்ட இரு தேர்வுகளிலும், காலி பணியிடங்களினை விட, சுமார் 20 மடங்கு அதிகமான நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது மிகவும் மோசமாக விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும்!!!! இந்தியாவின் வருங்காலத்தினை நிர்ணயம் செய்யும் தூண்கள், இவ்வாறு வேலையற்று வீட்டிலே முடங்கி கிடக்கும் போது, வருங்கால இந்தியா குறித்த புரிதல்கள் கானல் நீராகவே அமையும்!!!!!

வேலைவாய்ப்பின்மை என்பது இந்தியாவிற்கான பிரச்சனையாக மட்டும் பார்க்க இயலாது., உலகம் முழுமைக்குமான முழு முதற் பிரச்சனை!!! ஆனால், இந்த நிலையின் ஆழத்தினை புரிந்து கொண்டோமா??? என்பதே முக்கியமான செய்தி!!!

இவ்வாறாக…. இந்தியர் முழுமையான வேலைவாய்ப்பினை அரசினால் மட்டும் உருவாக்கி விட முடியுமா??? என்றால், நிச்சயமாக முடியாது என்று அறுதியிட்டு கூற முடியும். தேவையில் 10 சதவிதத்தினை பூர்த்தி செய்தாலே, நல்லது என்பேன்!!!

மற்ற 90 சதவீதமும், சுய தொழிலும், தனியார் துறையின் பங்களிப்பும் முக்கியம்!!!! தனியார் துறையின் பங்களிப்பிற்கு பண மூலதனமும், பொருள்/சேவையின் தேவையும் முக்கியம்!!! அது இரண்டின் நிலையினை, நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. வங்கிகள் கடன் கொடுக்க முடியாத அளவிற்கு, வாரா கடன் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. பொருள் மற்றும் சேவையின் தேவை, உலக பெருமந்தத்தினால் குறைவாக உள்ளது.

தனி மனித துண்டுதலும் இல்லாமல், வேலைவாய்ப்பு பிரச்சனையை குறைக்க இயலாது. பிரச்சனை நீடிக்குமானால், சமூக விரோத செயல்கள் அதிகமாகுமே தவிர குறையாது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment