ஏர்செல்
நெட்வெர்க்கில் உண்டான, கடனை திரும்ப
செலுத்த முடியாத நிலையினால், ஏப்ரல்
15 தேதியுடன் தனது சேவையை நிறுத்தி
கொள்வதாக அறிவித்துள்ளது. இது அனைவரும் அறிந்ததே!!!!
ஏர்செல்
நெட்வெர்க்கில், சுமார் 8 கோடி கஷ்டமர்கள் இந்தியா
முழுவதும் உள்ளனர். அதிலும் தமிழ்நாட்டில் மட்டும்,
சுமார் 1.5 கோடி கஷ்டமர்களை கொண்டிருந்தது.
இவர்கள் அனைவரும் வேறொரு நிறுவனத்திற்கு மாறி
விட்டனர்.
இவ்வாறாக,
புதிய நெட்வெர்க்கினை தேர்ந்தெடுக்கும் போது, அந்நிறுவனம் முறையாக
கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கிறதா??? என்பதே
முக்கிய செய்தி!!!
பெரும்பாலும்
நிறுவனங்களை, இதை பற்றி கவலைபபடுவதாக
தெரியவில்லை. தன்னுடைய கஷ்டமர்களின் எண்ணிக்கை அதிகமானால் மட்டும் போதும்!!! என்றே
செயல்படுகின்றன. இதற்கு முன்னர் reliance, videocon போன்ற நிறுவனங்களை
மூடும் போது, இந்நிலையே தொடர்கின்றன!!!
குறிப்பிட்ட
பகுதியில் உள்ள டவரிலிருந்து, ஒரு
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களே பேச முடியும்.
அவ்வாறான எண்ணிக்கையை தாண்டும் போது, network busy/ out of
order என்றே வருகிறது. call drop பற்றி டிராய் முறையாக
கவனிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது!!!
முறையாக
கட்டிடங்கள் இல்லாமல் தொடங்கப்படும் கல்லூரிகள், முறையாக ஆசிரியர்கள் இல்லாமல்
தொடங்கப்படும் பள்ளிகள், முறையாக பயிற்றுநர்கள் இல்லாமல்
தொடங்கப்படும் போட்டி தேர்வு மையங்கள்,
முறையாக பயிற்சி அளிக்காமல் வெளியேற்றப்படும்
கல்லூரி மாணவர்கள்.... இப்படியாக நுகர்வோர் ஏமாற்றப்படுவது நீக்கமற நிறைந்து கிடக்கிறது.
நுகர்வோர்
பாதுகாப்பு சட்டம் வந்து, அதை
பயனை முழுமையாக நுகர்வோர் அடைகிறார்களா? என்ற கேள்வியை கேட்க
வேண்டியுள்ளது.
உலக சந்தையர்களின் குப்பைத் தொட்டியாக கருதப்படும் இந்தியாவில், நுகர்வோர் பாதுகாப்பு/உரிமை குறித்த புரிதல்
இல்லாதற்கு, யாரை குற்றம் சுமத்துவது????
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment