Monday, April 2, 2018

ரியாலிட்டி ஷோவும் ரியல் லைப்பும்


ரியாலிட்டி ஷோக்களின உண்மை தன்மை குறித்து, எனக்கு கேள்வி இருந்தாலும், சில ஷொக்களை பார்ப்பது வழக்கம்!!! அதில் ஒன்று தான்..... கலக்க போவது யாரு!!! இது பல திறமையானவர்களை, வெளி கொண்டு வந்த நிகழ்ச்சி என்றால் மிகையில்லை!!!!

இன்று நாயகனாக வலம் வரும், சிவ கார்த்திகேயனாக இருக்கட்டும்!!! குணசித்திர நடிகராக வலம் வரும் ரோபோ சங்கராக இருக்கட்டும்!!! இதில் முத்திரை பதித்து, சினிமா துறையில் தடம் பதித்தவர்!!!

நகைச்சுவையை தாண்டி, பாட்டு, நடனம், பேச்சு என பல ரியாலிட்டி ஷோக்கள், எல்லா தொலை காட்சிகளிலும் நடைபெறுகிறது. இதன் மூலம், பல திறமையானவர்கள் வெளி வருகிறார்கள் என்பதால் இரட்டை மகிழ்ச்சியே!!!

IPL , ISL, IBL என தொழிற்முறை விளையாட்டுகளின் மீது எவ்வளவு தான் விமரசனம் இருந்தாலும், உண்மையிலேயே திறமையான வீரர்களை அடையாளப்படுத்துவதில் சிறந்ததாகவே அமைகிறது.

மேற்கண்ட அனைத்திலும், வணிக நோக்கமே முக்கியம்!! அதற்கான அழ வைப்பது, சண்டை போட வைப்பது, அடுத்தவரை தாழ்மைப்படுத்துவது என பல அபத்தமான செயல்கள் நடைபெறுவதை ஏற்று கொள்ள இயலாது...

ஒரு மனிதனுக்கு கலைத்துறையிலோ, விளையாட்டு துறையிலோ திறமையிருந்து, வாய்ப்பு கிடைக்காமல் இருக்கையில், மேற்கண்ட போட்டிகள் வரப்பிரசாதமாகவே பார்க்கிறேன்!!!

அதே நேரத்தில்....... விருப்பமில்லாமல், நடன பள்ளிகளுக்கும், விளையாட்டு பயிற்சி மையங்களுக்கும், ஒவிய பள்ளிகளுக்கும் அனுப்பவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்.

அதே மாதிரி, ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் விருப்பம் இருந்தும், படிப்பு மீதான ஆர்வம் இல்லாத குழந்தைகள் மீதும் படிப்பை திணிக்க கூடாது..

ஒவ்வொரு மனிதனுக்கு எதிர்காலத்தினை பற்றி தீர்மானிக்கும்/முடிவெடுக்கும் சுதந்திரம் உண்டு. அதில் பெற்றொரும், ஆசிரியரும் உறுதுணையாக இருக்காலாமே தவிர, முழு முதற் முடிவு பொருளாக இருக்க கூடாது!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment