புறக்கணிப்பு
என்பது சிறந்த எதிர்ப்பு !!! அத்தகைய
புறக்கணிப்பு தானாகவே எழ வேண்டுமே
தவிர, கட்டாயப்படுத்த கூடாது!!! .
அறிவியலே
தேவையில்லை என்பதையே, செல்போன், கம்யூட்டர் எனும் அறிவியல் சாதனத்தை
கொண்டே, வெளிப்படுத்த முடிகிறது!!!
இப்போது
காவிரி பிரச்சனைக்காக, ஐபிஎல் போட்டியை புறக்கணிக்க
சொல்கிறார்கள். ஆனால், அந்த புறக்கணிப்பு
தன்னிச்சையாக எழ வேண்டுமே தவிர,
கட்டாயப்படுத்த கூடாது!!! அவ்வாறு கட்டாயப்படுத்தி எதிர்ப்பை/புறக்கணிப்பை பதிவு செய்வதன் மூலம்,
என்ன நடக்க வாய்ப்பு உள்ளது
என்று தெரியவில்லை!!!!
அதே சமயத்தில், விவசாயின் சார்பாக, தன்னுடைய பங்களிப்பை செலுத்தும் குடிமகனாக யோசிக்கும் போது, தவறும் இல்லை
என்றே தோன்றுகிறது....
இதில் எது தவறு, சரி
என்ற விவாதத்திற்கு செல்ல, எனக்கு விருப்பமில்லை.
ஆனால், ஒரு விஷயத்தினை/ கருத்தினை,
கட்டாயப்படுத்துவதை நியாயப்படுத்த முடியுமா? என்பதே என்னுடைய கேள்வி!!!!
ஒரு அரசோ/இயக்கமோ/தலைவனோ,
ஒரு செயலை கட்டாயமாக்கும் போது,
“ இந்த செயலை செய்ய சொல்லி,
என்னை எப்படி கட்டாயப்படுத்தலாம்!? “ என்று எதிர்
கேள்வியே கேட்போம்!!! .... மாறாக, சரி என்று
ஒத்து கொள்வதில்லை!!!!
ஒரு ஜனநாயக நாட்டில், எந்த
முடிவும் சுதந்திரமாக இருக்குமே வேண்டுமே தவிர, கட்டளை இருக்க
கூடாது!!! அதற்கு நியாயம் கற்பித்து,
செய்ய முயல்வது சரியா?? என்ற கேள்வி
கடைசி வரை, தொக்கி நிற்கிறது.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment