அம்பேத்கர்,
காந்தி, பெரியார் போன்ற முக்கிய தலைவர்களின்
கருத்துகளையும் , விமர்சனங்களோடு ஏற்று கொள்வது எனது
புரிதல்!!!!
அவர்களை
முழுமுதற் தலைவனாய், எந்த நேரத்திலும் என்னால்
ஏற்று கொள்ள முடியாது; அப்படியே
ஏற்று கொண்டு விட்டால், என்னுடைய
சுயத்தை அடமானம் வைத்து விட்டதாகவே
எடுத்து கொள்ள முடியும்!!!!
அவர்கள்
பல்வேறு வகையான கருத்தியல்களை முன்
வைத்து சமூகத்தை சீர்திருத்தியவர்கள்!!! அந்த கருத்துகள், அந்த
கால கட்டத்திற்கானவை!!! பல நூற்றாண்டுகளுக்கு பொருந்த
கூடியவை யல்ல!!! திருக்குறளும் இதே
வகையில் அடங்கும்!!!
எப்போதும்
சமூகத்தின் கருத்துகளையும், விழுமியங்களையும் சூழ்நிலையே முடிவு செய்ய வேண்டுமே
தவிர, 100 வருடங்களுக்கு முன் வைத்த கருத்தாக்கங்கள்
கிடையாது!!!! பல இடங்களில் கருத்துகள்
ஒத்து போக வாய்ப்புகள் உண்டே
தவிர, 100 சதவீதம் அல்ல!!!
ஆனால்....
பெரியார் சொன்னது போல், “ நான்
சொல்கிற கருத்தாக இருந்தாலும் சரி, அதை பகுத்தறிவோடு
ஏற்று கொள்” என்பதை மட்டும்
100 சதவீதம் ஒத்து கொள்கிறேன்.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment