சில புரிதல்கள்..... எனக்கு குழப்பத்தையே எற்படுத்துவதாக
அமைகிறது. தமிழன் என்ற உணர்வு
எனக்குள் உண்டு. ஆனால், அது
தற்பெருமையாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன்.
மதம், இனம், மொழி, பாலினம்,
பொருளாதார நிலை என பல்வேறு
குறியீட்டு நிலைகள், மனிதனை பிரித்து விடுகிறது.
இன்றைய நிலையில், இவையெல்லாம் தேவையா??? பெரும்பாலான சீர்த்திருத்த வாதிகளின் நிலை!!!! ஆனாலும், சிலர் இன்னும் மொழி,
இனம் சார்ந்தும் தற்பெருமைகளை பிடித்து தொங்குவதாக உணர்கிறேன்.
அரசு தேர்வுகளில், மற்ற மாநில தேர்வர்கள்
தடுக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. நம்முடைய
இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் போது, பல்வேறு
சமூக பிரச்சனைகள் வரவே செய்யும். அதற்காக,
தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்
அனைவரும் தமிழர்கள் மட்டும் இருக்க வேண்டும்
என்பது எங்ஙனம் ???
உலக மயமாக்கலுக்கு பிறகு, பல செயல்கள்
எற்று கொண்டது தான் ஆக
வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்!!! இதனால் தான், அமெரிக்காவில்
ஹச்பி 1 விசாவிற்கான கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து, இங்கிலாந்து வெளிவருதற்கு இது தான்!!! உலகமயமாக்கலின்
விளைவினால் உண்டான வேலைவாய்ப்பின்மை நிலை!!!
இவ்வாறான.......
வேலைவாய்ப்பின்மை நிலை உலகம் முழுவதும்
வியாபித்திருக்கிறது. இதே புரிதலினை, அமெரிக்கா
முன்னரே நினைத்திருந்தால், தென் இந்தியர்க்கான வேலைவாய்ப்பு
குறைந்திருக்கும்!!! மத்திய கிழக்கு ஆசிய
நாடுகளினை வேலை தேடி படையெடுத்திருக்க
முடியாது!!! அஸ்ஸாம், பீகார் இருந்து குறைந்த
கூலிக்கு வேலை ஆள் கிடைத்திருக்காது!!!
இப்படியே அடுக்கி கொண்டே போகலாம்!!!
உங்களை போல், உலகமும் என்ன
தொடங்கியதன் விளைவு தான்!!! இன்றைய
வலது சாரி சிந்தனையின் மெல்லிய
எழுச்சி!!!
பொது நீரோட்டத்தில், இனத்தின் வரலாறு அழிக்கப்படும் போது
எதிர்ப்பதில் தவறில்லை!!! தன்னுடைய உரிமை நிலைநாட்டப்படாத போது,
எதிர் குரல் இடுவதில் தவறில்லை!!!!
அரசியல் சுய லாபத்திற்காக, இன
வாதம் பேசுவது அபத்தமாகவே தெரிகிறது;
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment