ஆடியோ டேப் விவகாரத்தில்.......... இந்த பாலியல்
வற்புறுத்தல் என்பது சமூகத்திற்கு புதியதா?
என்றால் , “ இல்லை” என்பார்கள் விவரம்
அறிந்தவர்கள்!!!! நடிகைகள் வாய்ப்பிற்காக..... படுக்கைக்கு அழைக்கும் விவகாரத்திற்கு, மேற்கண்ட விவகாரத்திற்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை.
இரண்டுமே,
சமூகத்திற்கு முன் தன்னை பெரிய
ஆளாக நிலைநிறுத்தி கொள்வதற்காக, சமூகத்தின் பார்வைக்கு அப்பால் நடைபெறும் பாலியல்
அவலங்கள்!!!
இன்றைய
தொழிற்நுட்ப வளர்ச்சியினால், சிலவைகள் மட்டும் பொது சமூகத்தின்
பார்வைக்கு வரும்!!! இரண்டு நாட்களுக்கு பொது
சமூகம் அற சீற்றம் கொள்ளும்!!!
ஒளி, அச்சு ஊடகங்களுக்கு தீனியாக
எடுத்து கொள்ளும்!!! இரண்டு நாட்கள் கழித்து,
அடுத்த பிரச்சனைக்கு தாவி, பொது சமூகம்
தன்னை தானே திருப்தி பட்டு
கொள்ளும்!!!
இது மாதிரியான உண்மைகளை வெளியே சொன்னாலும், அந்த
பெண்ணின் மீதான அவல பார்வை
மட்டுமே மிஞ்சும்!!! பாலியல் சீண்டல் செய்த
ஆணை, ஆண்மையின் அடையாளமாகவே பறை சாற்றும்!!! அப்படியே
வெளிவந்தாலும், எத்தனை ஆண்களுக்கு தண்டனை
வழங்கப்பட்டுள்ளது என்பதை சேர்த்தே பார்க்க
வேண்டும்.
இவ்வகையாக
சமூக எண்ணத்தினாலும், சமூக அச்சத்தினாலும், பெண்கள்
தனக்குள்ளே புழுங்கி வெளி சொல்லாமலே, கடந்து
விடுகின்றனர்!!!
இத்தகைய
பாலியல் சீண்டல்கள் என்பது இந்தியா போன்ற
மத்திய தர நாடுகளை தாண்டி,
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற முதன்மை நாடுகளிலும்
அதிகம் தான்!!!!
இந்தியாவில்
பாலியல் குறித்த புரிதல்களும், அறிவும்
மிக குறைவே!!! அதே சமயத்தில், பாலியல்
வறட்சியும் மிக அதிகம்!!!! இந்த
இடைவெளிகள் வன்மமாகவே நிரப்பப்படுகின்றன.
சமூகத்தில்
தன்னை நியாயமாக முன்னிறுத்தி கொள்ளவும் வாய்ப்புகள் குறைவாகி கொண்டே வருகின்றன!!!!
சமூகத்தின்
பலவீனம், அதிகார வர்க்கத்தின் பலமாக
மாறி விடுவது இயற்கையே!!! பெண்ணின்
சமூக அச்சம், ஆணின் சுதந்திரமாக
மாறி விடுகிறது!!!! இதன் ஒரு எச்சமே,
பாலியல் சீண்டலுக்கு ஆளாகி, கொலை செய்யப்படும்
சிறுமிகள்!!!!
ஆனால் ஒன்று....... இவ்வாறாக பாலியல் சார்ந்த பிரச்சனைகளை
வெளி கொணர்வதன் மூலம், பல சமூக
பிரச்சனைகளை அணைத்து விடுவதில் உள்ள
அரசியல், எந்த புத்தகத்திலும் சொல்லப்படாத
பாடம்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment