முதுநிலை
சித்த மருத்துவம் படித்து கொண்டிருந்த தருணம்
அது!!!! ஆன்லைனில் மைக்ரோமெக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் ஒன்றினை வாங்கி
இருந்தேன். சிம் போட்டு பார்த்தால்,
வேலை செய்யவில்லை!!! கஷ்டப்பட்டு, தேடி கண்டுபிடித்து சர்வீஸ்
செண்டருக்கு போனால், “ புது போனு தானே
சார், பிரிக்க வேண்டாம், ரிபிஸ்மெண்ட்
பண்ணிடுங்க சார் !!! என்றார் ” செல்போனை பேக் பண்ணி, கம்பெனிக்கு
அனுப்பி, புது போன் கேட்ட,
“ அந்த மைக்ரோமேக்ஸ் மொபைல் முடிஞ்சுட்டு சார்,
வேறு எதாவது வாங்கிங்கங்க சார்!!!”
என்றார் மெல்லிய குரலோடு, இளம்பெண்
ஒருவர். சரின்னு ஸ்பைஸ் போன்
வாங்கி பயன்படுத்தி கொண்டு இருந்தேன்.
இரண்டு
ஆண்டுகளாக, ஸ்பைஸ் போனை பயன்படுத்தி
கொண்டிருந்த போது, திடீரென ஒரு
நாள், ட்ச் போடு வேலை
செய்யவில்லை. சர்வீஸ் செண்டருக்கு எடுத்துகிட்டு
போனேன். “ இந்த மாடல் க்கு
ட்ச் பேடு கிடைக்காது சார்!!
புது போன் வாங்குங்க சார்!!!!!”
என்றார் ஒருவாறு முறைத்தவாறு!!! இதெல்லாம்
ஒரு போனு…. தூக்கிட்டு வந்துடங்க
சரி பண்றதுக்கு ……. என்று அவரது மனவோட்டமாக
இருந்திருக்கும்.
சரி!!!
போன தடவை, ஆன்லைனில் ஆர்டர்
போட்டு பிரச்சனையாகிச்சு!!! இந்த தடவை, நேரடியாகவே
கடையிலே வாங்கலாம் முடிவு பண்ணி, மைக்ரோம்மேக்ஸ்
ஸ்மார்ட் போன் வாங்கிட்டேன்!!! போனை
சார்சு போட்டு, போன் பண்ணா……
எதிர்தரப்பில் பேசுவது கேட்கவில்லை!!! கேட்டா
மைக் ரிப்பேர்ன்னு சொன்னாங்க!!!! என்ன கொடுமை சார்
இது!!! என்ற பஞ்ச டயலாக்
கூட பேச முடியாத தூர்ப்பாக்கிய
நிலை!!! ஆனால், செல்போன் ஷோரூம்
வைத்திருப்பவர் நல்லவருன்னு நினைக்கிறேன்!!!! உடனே மாற்றி கொடுத்திட்டாரு!!!!
ஏதோ இரண்டு வருசம் ஒடிச்சு!!!!
அதற்கிடையில்,
அக்காவிற்கு ஒரு போன் வாங்கினேன்!!!
அதுவும் ரிப்பேர்!!! மறுபடியும் சர்வீஸ் செண்டர் கொடுத்து,
சரி பண்ணினாங்க!!!
எனக்கு
பொதுவாக மூடநம்பிக்கை மீது நம்பிக்கையில்லை!!! அது
கூட உண்மையோ என்று கூட
யோசிக்க வைக்க விட்டது.
மறுபடியும்
இரண்டு வாரங்களுக்கு முன்னர், மைக்ரோமேக்ஸ் பிரச்சனையாகி விட்டது. இரு முறை சரி
செய்தும், மீண்டும் பிரச்சனை!! இனிமேல் புது போன்
வாங்கியே ஆக வேண்டும் என்று
முடிவு செய்தால், மீண்டும் உள்ளுற ஒரு வித
பயம்!!! மறுபடியும் போன் வாங்கினா….. ரிப்பேர்
ஆன… என்ன பண்றதுன்னு!!!!!
சரி!!!
நமக்கு தான் ராசியில்லை!!!! ப்ரண்ட்ஸ்
யாராவது கூப்பிட்டு வாங்கலாம் பார்த்தா!!!! யாரும் வர கூடிய
நிலையில்லை!!! சரி என்ன நடந்தாலும்
நடக்கட்டும்……… நானே தனியாக சென்று,
ஒரு புது போன் Redmi Note 4 வாங்கியாச்சு!!!
வாங்கி
ஒரு வாரம் கடந்து விட்டது!!!!
புது போன் வாங்கி, ஒரு
ஸ்டேடஸ் போட கூட பயம்!!!
அதுக்குள்ள போன் ரிப்பேர் ஆன
என்ன பண்றது!!! இன்னும் பயம் தொடரவே
செய்கிறது!!!!
மகிழ்ச்சியை
கூட, வருத்தத்தோடு கடக்க வைக்கிறது வாழ்க்கை!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment