Bridge Course
பற்றி விவாதங்கள் முற்று பெறாத நிலையிலே, Integrated Course பற்றி விவாதங்கள் கிளம்பி
விட்டன. ஜேகப் ஜான் எழுதிய கட்டுரையை தொடர்ந்து, இவ்வகையான விவாதங்கள் தொடங்கி விட்டன.
இந்த விவகாரத்தில்,
இருவகையான எதிர் வினைகளை எதிர் பார்க்கிறேன். 1. ஜேகப் ஜான் கட்டுரைக்கு எதிர் வினை
2. ஒருங்கிணைந்த மருத்துவ முறை குறித்த விவாதம் / தேவை குறித்த புரிதல். இரண்டுமே சம
காலத்தில் தேவையான புரிதலே!!! ஒருங்கிணைந்த மருத்துவ முறை குறித்து யோசிப்பதும், நடைமுறை
சாத்தியங்களை பற்றி விவாதிப்பதும் அதிக முக்கியத்துவம் என்று கருதுகிறேன்.
Bridge Course
பற்றி விவாதம் எழுந்த போது, “Bridge Course விட, Integrated Course வந்தால் நன்றாக
இருக்கும் “ என்று எண்ணினேன். Bridge Course கொண்டு வருவதும், நடைமுறைப்படுத்துவதும்
எளிது. ஆனால் Integrated Course நடைமுறைப்படுத்துவது என்பது சற்று சவாலான காரியம்.
குறைந்தபட்சமாக,
அனைத்தும் கிராமங்களுக்கு மருத்துவ வசதிகளை செய்வதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ
துறையில் தன்னிறவு பெற்றால் மட்டுமே, ஒருங்கிணைந்த மருத்துவ முறை கொண்டு வருவதை பற்றி
யோசிக்க முடியும். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், மருத்துவத்திற்கு ஒதுக்கப்படும்
நிதியை அதிகப்படுத்தினால் மட்டும் சாத்தியம்.
ஒவ்வொரு மருத்துவருக்கும்,
மற்றைய மருத்துவ முறைகள் குறித்த புரிதலை எற்படுத்த வேண்டும். அதற்கு, இளநிலை மருத்துவம்
படிக்கும் போது, அதனை பாடமாக்க வேண்டும். இத்தகைய புரிதல் இல்லாததால், ஒருங்கிணைந்த
மருத்துவ முறை குறித்த விவாதமே அர்த்தம் இல்லாதாகி விடுகிறது.
எல்லா மருத்துவ
முறைகளும், தங்கள் மருத்துவமுறைக்களுக்கே உரித்தான பாதகங்களை(Negative) யோசிக்க மறுக்கின்றனர்
/ ஒப்பு கொள்ள மறுக்கின்றனர். இந்த புரிதல்
இல்லாமல், ஒருங்கிணைந்த
மருத்துவ முறை குறித்த விவாதத்தின் தொடக்க புள்ளியே சாத்தியமல்ல!!!
மருத்துவம் என்பது
வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அதனால், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில்
வாழும் மக்களுக்கு மட்டுமே, ஒருங்கிணைந்த மருத்துவ முறை சாத்தியமா??? என்பது தெரியவில்லை,.
உலகளவில் விவாதம் தொடங்க வேண்டும். சீனாவிலும் ஒருங்கிணைந்த மருத்துவ முறை இருப்பதையும்,
இங்கு கவனத்தில் கொள்வது அவசியம்.
மருத்துவர்கள்,
திறந்த மனதோடு உரையாடலை முன்னிறுவது மிக முக்கியமானது. பராம்பரிய மருத்துவர்கள், விவாதத்திற்கு
தயராக இல்லை என்பதை ஒத்து கொள்ள இயலாது. நவீன மருத்துவர்களுக்கு, இதே மனநிலை இருக்கிறது
என்பதே உண்மை. உலகமாயமாக்கல் மற்றும் வணிக மயமாக்கலுக்கு பிறகு, தனிமனித பண பசி அதிகமாகி
விட்ட பிறகு, இது சாத்தியாமா? என்பதை சிந்திக்க வேண்டும்.
மருத்துவ செலவினங்கள்
அதிகமாகி விட்ட நிலையிலும், அனைத்து நோய்களுக்கு ஒற்றை தீர்வு சாத்தியமில்லாத நிலையில்,
ஒருங்கிணைந்த மருத்துவ முறை என்பது காலத்தில் கட்டாயம்.
ஒரே மருத்துவரே,
அனைத்தும் மருத்துவ முறைகளையும் கற்று, நோயாளிக்கு சிகிச்சை அளிக்க இயலுமா? அனைத்து
மருத்துவ முறைகளும், ஒரு இடத்தில் இருந்து, மருத்துவ முறை தேர்ந்தெடுக்கும் உரிமை,
மக்களுக்கு அளிப்பது நல்லதா???? மருத்துவ முறைகள், வெவ்வேறு அடிப்படை கொள்கைகளை உடையதாக
இருக்கும் போது, அனைத்தையும் மைய நீரோட்டத்தில் நிறுத்துவது எவ்வகையில் சாத்தியம்?????
என்று பல கேள்விகள் எழுகின்றது.
நாம் செல்லும்
பாதை, நீண்ட தூரமாக இருந்தாலும், முதலடியை இந்திய போன்ற நாடுகளில் எடுத்து வைப்பது
சாத்தியம் என்று நினைக்கிறேன். ஏனெனில், பல்வேறு மருத்துவ முறைகளை, தன்னத்தே கொண்ட
நாடு இந்தியா என்பதை மறந்து விட இயலாது.
ஏற்கனவே……. பல தருணங்களில்,
ஒரே நோயிற்கு பல மருத்துவ முறைகளை நோயாளிகள் எடுக்க தொடங்கி விட்டனர். அதனை மறைமுகமாக
பல்வேறு மருத்துவர்களும் ஆதரிக்க தொடங்கி விட்டனர். அதனை ஒழுங்குப்படுத்தி, முறையான
கட்டுபாடுகளோடு, பொதுமைப்படுத்துவதும் அவசியம். அத்தகைய புரிதலை, மருத்துவ சமூகம் ஏற்குமா
என்பதே மில்லியன் டாலர் கேள்வி!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment