நான் ஒரு எதிர்மறை சிந்தனையாளன்(negative
thinker). என் செயல்களை, கூர்ந்து கவனித்தவர்களால், நிச்சயமாக கூற இயலும். எனது
அக்கா மனிதவள மேம்பாட்டு(HR) துறையை
சார்ந்தவர் என்பதால், சரியாக கவனித்து கூறினார்.
ஒரு விஷயத்தை யோசிக்கும் போது, அதனால் ஏற்படும்
சாதகங்களை தாண்டி, பாதகங்களை பற்றி
மட்டுமே யோசிப்பேன். சாதகங்களால் வெற்றி கிடைப்பது உறுதி
என்பதனை தாண்டி, பாதகங்களை நீக்கினால்,
இன்னும் எளிதாக வெற்றிக்கனியை பறிக்கலாம்.
ஒரு நேர்மறை சிந்தனையாளனுக்கு…. சில
பாதகங்கள் இருப்பதை போலவே, எதிர்மறை சிந்தனையாளனுக்கு
சில பாதகங்கள் இருக்கவே செய்கின்றன. ஆதலால்… இதனை மாற்றி
கொள்ள விருப்பமுமில்லை;
இதனாலே…
வெற்றி பெற்ற தருணங்களில், பெரியளவு
உள களிப்பும் இருந்ததுமில்லை; மாறாக… சில பயங்கள்
மட்டுமே தொடரும். தோல்வியடைந்த தருணங்கள் கூட, பெரியளவிற்கு சோகத்தை
தந்ததில்லை. மாறாக அனுபவத்தை மட்டுமே
தந்துள்ளது.
2013 ம்
ஆண்டு, TNPSC சித்த மருத்துவ தேர்வில்
தோல்வியடைந்தாலும், அன்றிரவே…. TNPSC GROUP 1, GROUP
2 படிக்க ஆரம்பித்தேன். அதுவே 2016 ஆம் ஆண்டு சித்த
மருத்துவ தேர்வில் வெற்றியை பெற செய்தது.
” எதிர்மறை
சிந்தனையாளன் ” என்ற சிந்தனை தளம்
சரியா? தவறா? என்று விவாதிக்க
விருப்பம் இல்லை. ” தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்”
எனும் பழிமொழிக்கு ஏற்ப…. வாழ பழகி
கொள்ள வேண்டியது தான்!!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment