இரண்டு
நாட்களுக்கு முன்னர், நண்பர் ஒருவருடன் பேசி
கொண்டிருந்தேன். அவர் கண்ட நிகழ்வை,
என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன விஷயம்,
கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. வாழைப்பழ கடையில், ஒரு வாழைப்பழ தாரினை,
ஒரு நீருள்ள வாளியில் மூழ்க
வைத்து எடுத்தர்களாம். அவ்வாறு எடுத்தால், சில
மணி நேரங்களில் பழத்து விடுமாம்.
நானும்
வாழைப்பழத்தை பழக்க வைப்பதற்கு, வேறு
வகையான முறைகளை பார்த்திருக்கிறேன். பொங்கல்
நேரங்களில், புகைமூட்டத்தின் மூலம் பழுக்க வைப்பார்கள்.
இந்த முறைகளால் பழுக்க வைக்கப்படும் பழங்கள்,
நல்லவையா?? உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாதா?? என்ற
கேள்வியே முன் நிற்கிறது.
இதற்காக
calcium carbide, acetylene, ethylene, propylene, ethrel (2-chloroethyl
phosphonic acid), glycol, ethanol போன்ற
ராசாயணங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தலைவலி,
தூக்கமின்மை, ஞாபக மறதி, மயக்கம்
மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள்
ஏற்படலாம் என்கிறது அறிவியல்.
இது மாதிரியான நிகழ்வை, நாமும் கடந்து சென்றிருப்போம்.
ஆனால், அடுத்த நொடியே மறந்து
விட்டு, அதே பழத்தை வாங்கி
உட்கொள்வோம்!!!! நானும் அதற்கு விதிவிலக்கல்ல!!!
ஆனால், நண்பரின் ஒரு கேள்வி, என்னை
இன்னும் தீவிரமாக சிந்திக்க வைத்தது. “ நம்முடைய வீட்டில் வளரும் வாழைப்பழம் எப்போது
ஒரே சீராக பழுப்பதில்லை, மேலிருந்து
கீழாக தான் பழுக்கும். ஆனால்
கடைகளில் விற்கபடுவதில் தார் முழுவதும் பழுத்திருக்கும்.
அதை பற்றி யாரும் யோசித்ததில்லை…”
நானும் அப்படித்தான் இருந்தேன்.
வியாபரத்திற்காக
செயற்கையாக பழுக்க வைக்கிறோம் என்று
வியாபரிகள் நியாயப்படுத்தலாம். ஆனால் உடல்நலத்திற்கு கேடு
விளைவிற்பதாக இருந்தால்… நிச்சயமாக கெடுதலே!!!! கவனமாக பார்த்து வாங்குங்கள்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:
Post a Comment