ஒரு கருத்தாக்கம்/ செயலை விமர்சனம் செய்யும்
போது, இரு வகையான புரிதலை
கொள்ள வேண்டியுள்ளது. ஒரு வகையினர் கண்மூடித்தனமாக
எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது; மற்றொருவர்
உண்மையாகவே நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ விமர்சனத்தை
வைப்பார்.
முதல் வகையினர்…. தன் சார்ந்த இயக்கம்/கட்சி/கொள்கை சார்ந்து
விமர்சிப்பார்கள். தன்னை சார்ந்தவர்களாக இருந்தால்,
நேர்மறையாகவும், எதிராக இருந்தால், எதிர்மறையாக
விமர்சிப்பார்கள். இவர்களின் கருத்துகளை பெரும்பாலும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமே
இல்லை. இத்தகைய மனிதர்கள் இருப்பதனால்
தான்… ஒவ்வொரு இயக்கமும் வளர்ச்சியை
நோக்கி பயணிக்கும். மாறாக, இவர்களின் அதீத
புகழ்ச்சி, வீழ்ச்சியையும் அடைய செய்கிறது.
இரண்டாவது
வகையினர் மட்டுமே உண்மையான விமர்சனத்தை
வைப்பார்கள். இவர்களின் கருத்துகள் மிகவும் முக்கியமானது; புறம்
தள்ளி விட முடியாதவை.. ஆனால்,
இவர்களை கண்டறிவது கடினம். குறைந்த அளவே
இருக்கின்றனர்.
மாறாக…
முதல் வகையினரே, சமூக வலைத்தளங்களில் அதிகமாக
இயங்குகின்றனர். ஆகையால் தான்…. சமூக
பிரச்சனைகளுக்கும், சமூக வலைத்தளங்களுக்கு பெரிய
இடைவெளி இருக்கிறது. இவர்களின் பதிவுகளை வாசிக்காமல் தவிர்ப்பதே நல்லது. இது மாதிரியான
மனிதர்களை…. Unfriend செய்தும் இருக்கிறேன்….
.உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment