Friday, November 4, 2016

சித்த மருத்துவமும் நோய் கணிப்பும்

சித்த மருத்துவ பயிற்சி என்பது கடல் போன்றது. அதன் அனைத்தும் நுணுக்கங்களையும், சாதக பாதகங்களையும் இளங்கலையிலே அறிவது என்பது கானல் நீரே!!! சித்த மருத்துவத்தின் பல வழிமுறைகள் உள்ளுணர்வு சார்ந்ததாக உள்ளது எனலாம். அதனை புரிந்து கொள்வது என்பது, மிகப்பெரிய சவாலே!!!! அவ்வாறு புரிந்து சித்த மருத்துவ பயிற்சியில் கொடி கட்டி பறந்தவர்கள். சிலரே!!!!

சித்த மருத்துவம் பயில தொடங்கிய நாள் முதல் இன்றைய பொழுது வரை, 12 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்று வரை சித்த மருத்துவத்தை பற்றிய அறிவை பெற முயன்று கொண்டிருக்கிறனே தவிர, முழுமை பெற இயலவில்லை. முழுமையான புரிதல் என்பது சற்று சவாலான காரியம் என்பதையும் அறிந்தே உள்ளேன்.

ஆனாலும், இளங்கலை படிக்கும் போது, ஒர் செயலை மட்டும்…….. எனது உள்ளுணர்வு முடிவு செய்து விட்டது. முதுகலை படித்தால், நோய்நாடல் துறையே தேர்ந்தெடுப்பது!!!!!

எந்தவொரு மருத்துவ துறையாக இருந்தாலும், நோயை தீர்ப்பதில் இரு வகையான படிநிலைகளை கடந்து வர வேண்டும். ஒன்று நோய் கணிப்பு; மற்றொன்று அதற்கான மருத்துவம்; இந்த இருவகையான படிநிலைக்கும், மருத்துவன் சமமான முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

நவீன மருத்துவத்தில், நோய் கணிப்பில் சிறப்பாகவே செய்கிறார்கள் என்று சொல்வேன். அதற்கு ஏற்றாற்போல், புதிய கணிப்பு முறைகளும், தினந்தோறும் அறிவியல் வழங்கி வருகிறது. எனவே மருத்துவத்தை தெரிவு செய்வதில் பிரச்சனையே இருக்காது. நோயாளியை எளிதாக தீர்க்க இயலும்.
ஆனால், சித்த மருத்துவ துறையில்நோய் கணிப்பில் சற்று தடுமாறுவதாகவே உணர்கிறேன். எனக்கு உள்ளும்அந்த தடுமாற்றத்தினை உணர்ந்தேன். அதனை போக்கவே நோய் நாடல் துறையை தேர்ந்தெடுக்க விரும்பினேன்.

நோயின் முதற்காரணத்தை தெரியாமல், நோயிற்கு மருந்து வழங்கினால், தீர்வு சற்று கடினமாகவே இருக்கும். இதையே்..”நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப சொல்..” என்றார் வள்ளுவர்.
சித்த மருத்துவத்தின் நோய் கணிப்பு என்பது மிகவும் கடினமானதே!!! 

சித்தர்கள்நோயாளிகள் சொன்ன குறிகுணங்களை வைத்தும், அவர்களிடமிருந்தும் பெறக்கூடிய பொருட்களிலிருந்து(மலம், சிறுநீர், உமிழ்நீர் போன்றவை) நோயை கணிக்க முயன்றனர். இதையெல்லாம் வைத்தும், வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற உயிர் தாதுக்கள் மூலம் நோயை கணித்தனர்.

ஆனால், இன்றைய சித்த மருத்துவர்களோ…. சித்த மருத்துவத்தின் நோயை கணிப்பையும் தவற விடுகின்றனர். நவீன அறிவியலின் வழிமுறைகளையும் பயன்படுத்துவதையும் தவிர்க்கின்றனர். இத்தகைய போராட்ட மனநிலையிலே…. முறையான நோய் கணிப்பையும் தவற விடுகின்றனர். கடைசியாக தீர்வும் கானல் நீராகவே மாறி விடுகிறது. (இது என் சொந்த கருத்து. மாறுதல்கள் இருக்கலாம்.)

என்னை பொறுத்தவரை.. நோய் கணிப்பைஇரு வழிகளிலும் பெற முயல்கிறோம். ஒன்று சித்த மருத்துவ தத்துவத்தின் வழியாகவும், மற்றொன்று நவீன அறிவியல் வழியாகவும் பெறுகிறேன். அதன் பிறகு தீர்வை பற்றி யோசிப்பேன். அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றிருக்கிறேன். வரும் காலங்களில், பெரிய வெற்றியையும் பெறலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதற்கு முதுநிலை பட்டப்படிப்பில் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், சக மருத்துவ நண்பர்களுக்கு என்றும் நன்றி கடன் பட்டவன்!!!!

.உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment