நேற்றைய
நீயா நானா விவாதம், மிகவும்
சுவராசியமாகவே அமைந்தது. சாகசம் செய்பவர்கள் vs பொதுமக்கள்
என்ற தலைப்பில் நடந்தது. ஒவ்வொரும் செய்த சாகசனங்கள் பார்த்த
போது, உடல் மெய்சிலிர்க்கவே செய்தது.
மற்றொரு புறம்… அவருக்கு ஏதாவது
பாதிப்பு ஏற்படுமோ என்ற பயமும் இருந்தது.
இன்றைய
நவீன மனிதர்கள், பெரும்பாலும் பயம் சார்ந்த மனநிலையோடு
வாழ்கின்றனர். படிப்பு, திருமணம், வேலைவாய்ப்பு, உடல்நலம் என்று வாழ்க்கையில் எல்லா
நிலைகளிலும், பயம் தொற்றி கொள்கிறது.
இவ்வாறு பயம் கொள்ளாத மனிதர்கள்
வெகு குறைவு.
எதற்கு
ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற
மனநிலையே அதிகமாக இருக்கிறது. எப்போதும்
comfort zone ல் இருக்க விரும்புகின்றனர். அதனை
முறியடித்து எழுபவர்களாகவே, இத்தகைய சாகசகார்களை காண்கிறேன்.
இவர்கள் செய்வது சரியா?? தவறா??
என்ற விவாதமும் சரி தான். ஆனால்
சாகசம், அவர்களுக்கு மனநிறைவை தரும் என்றால், அதற்கு
மேல் விவாதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
எழுத்தாளர்
அபிலாஷ் பார்வை அருமை!!!! இப்படியாக…
எதாவது வித்தியாசமாக செய்கிறவார்களே… உலகம் பரிணாம வளிர்ச்சி
அடைந்தது என்றார். மேலும் எந்தவொரு விளையாட்டு,
முழு வடிவம் பெற்று வளர்ச்சியடைந்து
விட்டால், இது போன்ற கேள்விகள்
ஏழாது. அது வரை எழுவதையும்
தடுக்க இயலாது என்றார்.
ராஜாகோபலனின்
பார்வையும் வித்தியாசமாக இருந்தது. முன்றைய போர் வடிவமே..
இன்றைய விளையாட்டு வடிவமாக உள்ளது என்பது
அருமை.
சாகசகார்கள்…..
ஒரு விதமான உளவியல் மனநிலையில்
இருந்தாலும், அவர்களின் அறிய சாகசங்கள், நம்
மனதினை ஒரு நிமிடமாக வியப்பு
நிலைக்கு கொண்டு சென்றாலே,…. அவர்களின்
லட்சியத்தில் வெற்றி பெற்றவர்களே கருதுவேன்!!!!!!
.உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment